நிகழ்வுகள்

மார்க்சிய – லெனினிய பிரிவு மாணவர் அமைப்பாளர் பொறுப்பில் இருந்து திமுக ஆட்சி கலைக்கப்பட்டது எதிர்த்து போராட்டம்
9 மாதங்கள் சிறைவாசம்
நெருக்கடி நிலையின்போது இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிய - லெனினிய பிரிவு) மாணவர் பிரிவின் அமைப்பாளர் பதவி வகித்து, கட்டாயக் குடும்பக்கட்டுப்பாடு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனநாயக நெறிகளை மீறி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் கலைக்கப்பட்டபோது தி.மு.க, தி.க, ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்களுக்கு ப...

தேதி: 1976 - 1977

இடம்: மதுரை

வெள்ள நிவாரணம் திரட்டுதல் – பிரதமர் இந்திரா காந்தியிடம் பாராட்டு சான்றிதழ்
வெள்ள நிவாரணம் திரட்டுதல்
மருத்துவக் கல்லூரி மாணவர் பருவத்தில் பீகாரில் வெள்ளச்சேதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி மற்றும் உடைமைகளைத் திரட்டி உதவியதைப் பாராட்டி, அன்றைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் அவர்களிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்றார்.

தேதி: 1975

இடம்: கோவை

தீண்டாமைக்கு எதிரான போராட்டம்
போராட்டம்
பிறந்த மண்ணில் பள்ளி நாட்களில் தீண்டாமைக்கு எதிராகவும், மனித உரிமைகளுக்காகவும் போராடி, பள்ளியில் நடந்த தீண்டாமைக் கொடுமைகளைத் தட்டிக் கேட்டார்; பள்ளி மாணவர் தலைவர் பொறுப்பு வகித்து சிறப்பாக பணி புரிந்தார்; சாதி வெறியர்களை நீக்கக் கோரிக்கை வைத்தார். ஆசிரியர்களிடம் நிலவிய தீண்டாமையைக் கண்டித்துப் போராடினார்.

தேதி: 1966 - 1971

இடம்: மசக்கவுண்டன் புதூர்