தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டும், படகுகள் பறிமுதல் செய்யப்பட்டும், அவர்களின் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டதோடு, 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தொடர்ச்சியாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்களைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும், பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றையெல்லாம் நிறைவேற்றித் தரக்கோரி சட்டசபையில் கவனஈர்ப்புத் தீர்மானங்களைக் கொண்டுவந்தும், வெளிநடப்பு செய்தும் தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை மீட்டுக் கொடுத்தார்.
ஏப்ரல் 12 விவசாய நிலத்திலிருந்து தண்ணீர் எடுத்து தனியார் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்ய கோட்டாட்சியர் விதித்தத் தடை உத்தரவுக்கு எதிராக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விதித்த தடையாணையை விலக்கக்கோரி டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் மனுத்தாக்கல் செய்து, தானே வாதாடி, நீதிமன்ற ஆணை பெற்று, தமிழகத்தில் நிலத்தடிநீர் கொள்ளை மட்டுமின்றி, மணல் கொள்ளை, கனிமவள கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.