கீழ்காணும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து Submit என்ற சிவப்பு நிற பட்டனை அழுத்தவும் உங்களது விண்ணப்பம் இளையதள நிர்வாகியின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும்
இணையதள நிர்வாகி ஒப்புதல் அளித்த பின்பு விண்ணப்பத்தின் கடைசில் உள்ள Download ID Card என்ற பச்சை நிற பட்டனை அழுத்தி தாங்கள் பதிவு செய்த தேசிய அடையாள அட்டை (ஆதார்-Aadhaar) எண்ணை பயன்படுத்தி கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
புகைப்படம் பதிவேற்றம் செய்யும் பொழுது கவனிக்க வேண்டியவை
# தெளிவான நேர்த்தியான வண்ணமயமான புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும்
# பாஸ்போர்ட் அளவிலான முகம் தெளிவான புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும். இது உங்களது அடையாள அட்டை என்பதை கவனத்தில் கொள்க.
# புகைப்படத்தை பதிவேற்றம் செய்தபின் அது நேராக இருக்கிறதா? என்பதை சரி பார்த்த பின்பு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
# 500 KB க்கு மிகாமல் இருக்கும் புகைப்படத்தை மட்டுமே பதிவேற்றம் செய்யமுடியும்.
உங்களது பெயர், தந்தை / கணவர் பெயரை பதியும் பொழுது கவனிக்க வேண்டியவை
# உங்கள் பெயருக்கு முன்னோ பின்னோ தந்தையின் பெயரையோ அல்லது முதல் எழுத்தையோ பதிவு செய்ய வேண்டாம்
# உங்கள் தந்தை அல்லது கணவரின் பெயரை பதிவு செய்யும் பொழுது நீங்கள் விரும்பினால் அவரின் பெயருக்கு பின்னால் அல்லது முன்னாள் அவருடடைய தந்தையின் முதல் எழுத்தை பதிவிடவும்
# பெயரின் எந்த இடத்திலும் புள்ளிகளை வைக்க வேண்டம். வேண்டுமானால் ஒரு இடைவெளி விடவும்.
விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு என்ன ?
18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பித்தவுடன் பதிவிறக்கம் செய்யலாமா ?
முடியாது. இணையதள நிர்வாகி ஒப்புதல் அளித்த பின்பு நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 1 மணிநேரத்திலிருந்து 48 மணிநேரத்தில் ஒப்புதல் தரப்படும்.
விண்ணப்பத்தில் தவறான தகவல் மறந்து கொடுத்து விட்டால் சரி செய்து கொள்ளலாமா ?
முடியாது. நிர்வாகி மட்டுமே தற்சமயம் மாற்ற முடியும். விரைவில் விண்ணப்பித்தவர்களே தவறான தகவல்களை திருத்திக்கொள்ள வசதி செய்து தரப்படும்
தமிழ் / பிற மொழிகளை பயன்படுத்தலாமா ?
முடியாது. பெயர் மற்றும் தந்தை கணவர் பெயர் உட்பட அனைத்தையும் கண்டிப்பாக ஆங்கிலத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். பிற மொழி வசதி தற்சமயம் இல்லை
எந்த நேரத்தில் உறுப்பினர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் ?
24 மணி நேரமும் விண்ணப்பிக்கலாம்.
உறுப்பினர் அட்டையை பிரிண்ட் எடுக்கலாமா ?
தாராளமாக. ஏற்கனவே நீங்கள் பதிவிறக்கம் செய்திருந்தாலும் பிரிண்ட் எடுக்கும் முன் மீண்டும் ஒருமுறை பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதில் வேறு ஏதேனும் பிரச்சனை என்றால் என்ன செய்வது?
+91 96008 96808, +91 63852 25283 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
contact@ptparty.org க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
விண்ணப்பத்தில், விண்ணப்பிப்பதில் மேலும் ஏதேனும் குறைகள்/ஆலோசனைகள் இருந்தால் கட்சியின் தகவல் தொழில்நுட்ப குழுவினரை அணுகவும்
தெளிவற்ற, கோணலான, அடையாளம் காண இயலாத புகைப்படங்களை பதிவேற்றம் செய்தவர்கள்; தமிழில் தகவல்களை பதிவு செய்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.
