தலைவர்
டாக்டர் க கிருஷ்ணசாமி – ஆளுமைக் குறிப்பு

பெயர் : டாக்டர் க. கிருஷ்ணசாமி, எம்.பி.பி.எஸ்., எம்.டி.,
(நிறுவனர் – தலைவர், புதிய தமிழகம் கட்சி)
பெற்றோர் : கருப்புசாமி குடும்பர் – தாமரை அம்மாள்
பிறந்த நாள் : ஏப்ரல் 3
இடம் : மசக்கவுண்டர் புதூர், குடிமங்கலம், உடுமலைப்பேட்டை,
(பழைய கோவை மாவட்டம்) திருப்பூர் மாவட்டம்.
தற்போதைய இருப்பிடம் எண்: 22, பழைய எண்: 39 பொதிகை இல்லம்
திருமூர்த்தி நகர், குனியமுத்துர் (அஞ்சல்) கோயம்பத்தூர் – 641008
கல்வி
பள்ளி : அரசினர் உயர்நிலைப் பள்ளி பூளவாடி (பள்ளிஇறுதிவரை)
புகுமுக வகுப்பு : அரசினர் கலைக்கல்லூரி, கோயமுத்தூர். (தேசிய அறிவியல் தகுதிகாண் திட்டம் – சிறுவாணி நீர் மாசு குறித்து ஆய்வறிக்கை சமர்ப்பித்தல்)
கல்லூரி
1. வேளாண்மைக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை
கழகம், கோயமுத்தூர். 45 நாட்கள் – வேளாண்மைப் பல்கலைக் கழக துணை முதன்மையர் முனைவர் தானியல் சுந்தராசு அறிவுரைப்படி மருத்துவக் கல்லூரியில் சேரல்.(மருத்துவக் கல்லூரி சேர்ப்பு அனுமதிக் கடிதத்தை சாதி வெறி பிடித்த அஞ்சல்காரர் 10 நாட்கள் மறைத்து, வேண்டுமென்றே தாமதப்படுத்தி இடையூறு செய்து கொடுத்தார்.
2. இளநிலை மருத்துவம் (எம்.பி..பி.எஸ்.)
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி (1972-75) முதல் இரண்டாண்டுகள்) மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை. (1975-78) மூன்றாம் ஆண்டு முதல் பயிற்சி மருத்துவர் பணி வரை),
3. முதுநிலை மருத்துவம் (எம்.டி.)
முதுநிலை மருந்தியல் கோயமுத்தூர் மருத்துவக் கல்லூரி (1982 – 84)
திருமணம் : டாக்டர் வி.வி. சந்திரிகா கிருஷ்ணசாமி, பி.எஸ்.சி., எம்.பி.பி.எஸ்.,
நாள் : 22.01.1984 (திருமணமான இரண்டாவது நாளில் விழுப்புரம் 12
பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் படுகொலை தொடர்பான போராட்டத்தில் கைது. மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லப்படல் – மிசா கால சிறை நண்பர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சார்ந்த வழக்கறிஞர் விஸ்வநாதன் அவர்களின் வாதத்திறமையால் பிணையில் விடுதலை)
குழந்தைகள்
மகள் : டாக்டர் கி. சங்கீதா ஓம்நாத் எம்.பி..பி.எஸ்., டி.ஜி.ஒ.,
மருமகன் : டாக்டர் ஓம்நாத் எம்.பி..பி.எஸ்., எம்.டி.,
மகன் : டாக்டர் கி. ஷியாம் கிருஷ்ணசாமி எம்.பி..பி.எஸ்., எம்.எஸ்., எம்.சி.எச்.,
மருமகள் : டாக்டர் ஜி. சமீரா ஷியாம் எம்.பி..பி.எஸ்., எம்.டி.,
பொது வாழ்வில் 60 ஆண்டுகள்
12 வயதில், பொது வாழ்வில் அடியெடுத்து வைத்த தலைவர் டாக்டர் அய்யா அவர்கள், கோவையில் தன் அண்ணன் திரு. ராஜு அவர்கள் தலைமையில் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்றார். கொங்கு நாட்டில் விவசாயக் கூலிகளுக்கு, கூலியாக விளைபொருளை மட்டும் வழங்கும் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து. முதன்முறையாக கூலியாகப் பணம் கொடுக்கக் கோரி, நிலவுடைமையாளர்களை எதிர்த்துப் போராடி, களத்தில் தனி முத்திரை பதித்தார்.