மண்ணுக்கேத்த மார்க்சியம்..! தமிழகத்தில் உண்மையான பொதுவுடமை இயக்கம் புதிய தமிழகம் கட்சி மட்டும்தான்..!!

இந்த மண்ணில் மார்க்சியத்தை நேரடியாக செயல்படுத்த முடியாது. சாதிப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் வர்க்கமாக ஒன்றிணைய முடியாது.

பதிவுகள்
s2 806 Views
  • Dr-K-Krishnasamy
  • Dr-K-Krishnasamy
Published: 21 Dec 2020

Loading

நிருபர் கேள்வி

புரட்சிகர மார்க்சிஸ்ட் இயக்கத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர் நீங்கள். உங்கள் பொதுவுடமை பார்வை, இப்போது ஒரே ஒரு சாதிக்கான பார்வையாக சுருங்கிவிட்டதே?

டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் பதில்

முதலாளித்துவ நாடாக இருந்த ரஷ்யாவில், தொழிலாளர்களைத் திரட்டி புரட்சி செய்தார்கள். சீனாவில் நிலச்சுவந்தார்களுக்கு எதிராக விவசாயிகள் புரட்சி செய்தார்கள். ஆனால், இங்கே பண்ணையாளர்களுக்கு எதிராக விவசாயிகளை ஓரணியில் திரட்ட முடிந்ததா-? அதற்கு சாதி தடையாக இருக்கிறது.

கீழவெண்மணியில் 1968ல் பண்ணையார்களுக்கு எதிராக அனைவருக்கும் தான் போராடினார்கள். ஆனால் கொளுத்தப்பட்டது தேவேந்திர குல வேளாளர்கள் மட்டும் தானே. மற்ற சமுதாய விவசாயிகள் எல்லாம் பண்ணையார்களுக்கு ஆதரவாகவும், அடியாட்களாகவும் ஆகிவிட்டார்களே? இந்த மண்ணில் மார்க்சியத்தை நேரடியாக செயல்படுத்த முடியாது. சாதிப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் வர்க்கமாக ஒன்றிணைய முடியாது.

சர்க்கரை வியாதியுள்ள மனிதனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டு மென்றால், முதலில் சர்க்கரை வியாதியை குணப்படுத்த வேண்டும். இல்லையென்றால் ஆபரேஷன் வெற்றியடையாது. அதை தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகள் செய்யவில்லை. நாங்கள் செய்கிறோம். உண்மையான பொதுவுடமை இயக்கம் புதிய தமிழகம் தான்.

பள்ளி மாணவர் பருவத்தில், “ஸ்டாலின் கிருஷ்ணசாமி” என்றுதான் பெயரை எழுதுவேன்- டாக்டர் கிருஷ்ணசாமி.

1998-ம் ஆண்டு பத்திரிக்கையாளர் ஷோபா வாரியாருக்கு, டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் அளித்த ஆங்கில பேட்டியின் தமிழாக்கம்.

#ஷோபாவாரியார் கேள்வி;

உங்கள் கல்லூரிக்காலங்களில் நக்சல்களின்பால் பெரும் ஈடுபாடோடு இருந்தீர்கள் என்று கேள்விப்பட்டேன். இயக்கங்களில் சேர்ந்து பணியாற்றினீர்களா ?

#டாக்டர்கிருஷ்ணசாமி பதில்;

மார்க்சிஸ்ட் அமைப்புகளின்பால் ஈர்ப்பு என்பது பள்ளியிலேயே தொடங்கிவிட்டது. அப்போது நான் என் பெயரை “ஸ்டாலின் கிருஷ்ணசாமி” என்றே எழுதினேன். அதன் மூலமாக, ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறையை என்னளவில் நான் எதிர்க்கத் தொடங்கினேன்.

மார்க்சிஸ்ட்டாக மட்டுமல்லாமல், ஆறாம் வகுப்பிலேயே நான் என்னை பகுத்தறிவுவாதியாகவும் உணரத் தொடங்கினேன்.