விதிமுறைகளும்..! நிபந்தனைகளும்..!!

18 வயது முடிந்த இந்திய குடிமகனாகிய தாங்கள் தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் புதிய தமிழகம் கட்சியில் தங்களை முழுமனதோடு இணைத்துக்கொண்டிருக்கிறீர்கள்
கட்சியின் சட்ட திட்டங்களை அறிந்தவராகிய தாங்கள் கட்சியின் அனைத்து விதிகளுக்கும் கட்டுப்பட்டு செயல்படுவேன் என்ற உறுதியை இதன்வாயிலாக ஏற்கிறீர்கள்
தங்களது விருப்பத்தின் பேரில் உறுப்பினர் படிவத்தில் கேட்கப்பட்ட அனைத்து விபரங்களையும் வழங்கியதன் அடிப்படையில் தங்களது அலைபேசி எண், முகவரி உட்பட தாங்கள் கொடுத்திருக்கும் அனைத்து தகல்வல்களையும் கட்சி தனது நிர்வாக நடைமுறைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள எந்த நிபந்தனையுமன்றி ஒப்புக்கொள்கிறீர்கள்
இந்திய கூட்டாட்சி தத்துவம் – இறையாண்மை – சாதி மத பேதமற்ற சமத்துவ நல்லிணக்கம் – தனிமனித சுதந்திரம் – சுயமரியாதை போன்றவற்றிற்கு எந்த சூழலிலும் பங்கம் வராதவாறு நடந்து கொள்வேன் என்றும் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உடன்பட்டு கட்சி தலைமையின் கட்டுப்பாட்டில் செயல்படுவேன் என்றும் உறுதி கொள்கிறீர்கள்
கடந்த காலங்களில் கட்சி நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள் இணையவழி உறுப்பினர் அட்டையை இந்த தளத்தின் வழியே பதிவிறக்கம் செய்து உறுப்பினர் அட்டையை பெற்றிருந்தாலும் கட்சியின் கடந்த கால நடவடிக்கைக்கு வருத்தம் தெரிவித்து கட்சி தலைமையின் ஒப்புதல் கிடைக்கப்பெறும் வரை அவர்களின் இணையவழி உறுப்பினர் அட்டை எந்த விதத்திலும் தகுதிக்குரியதாய் ஏற்கப்பட மாட்டாது.