திரு. மனோபாலா அவர்கள் மரணம் – டாக்டர் கிருஷ்ணசாமி இரங்கல்

நினைவுகள்
s2 33 Views
  • Manobala

    திரு. மனோபாலா அவர்கள் மரணம் – டாக்டர் கிருஷ்ணசாமி இரங்கல்

  • Manobala
Published: 04 May 2023

கதாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட திரு.மனோ பாலா அவர்கள் மரணமெய்திவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவர் திரைப்படத்துறையிலிருந்தாலும் முற்போக்கு சிந்தனையோடும், எளிய முறையிலும் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். நம்முடைய நீண்ட கால நண்பர். அவருடைய மரணம் கலைத்துறைக்குப் பேரிழப்பு என்று சொன்னால் மிகையாகாது.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் – நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
03.05.2023