மூத்த பத்திரிகையாளர் N.V.மல்லர் மறைவு – இரங்கல் செய்தி!

நினைவுகள்
s2 62 Views
  • Mallar

    மூத்த பத்திரிகையாளர் N.V.மல்லர் மறைவு – இரங்கல் செய்தி!

  • Mallar1
  • Mallar2
  • Mallar3
  • Mallar4
  • Mallar
  • Mallar1
  • Mallar2
  • Mallar3
  • Mallar4
Published: 09 Apr 2023

மூத்த பத்திரிகையாளரும், Press Trust Of India செய்தி நிறுவனத்தின் கோவை மண்டல தலைமை செய்தியாளருமான திரு N.V.மல்லர் அவர்களின் மறைவு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அவர் பத்திரிகையாளர் என்பதையும் தாண்டி எனது 30 ஆண்டுகால நண்பர்.

அவர் கடந்த காலங்களில் நோய்வாய்ப்பட்டு சங்கீதா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட பொழுதெல்லாம், அவரை நன்கு குணப்படுத்தி அவர் உடல் நலத்தைப் பேணி பாதுகாத்து வந்தோம்.

இன்று மதியம் ஒரு மணியளவில் அன்பு நண்பர் அன்புச்செல்வமிடமிருந்து ’மல்லர் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை; ஆம்புலன்சில் அழைத்து வருகிறார்கள்’ என்ற தகவல் வந்தவுடன் எங்கள் மருத்துவமனை மருத்துவர் குழு சிகிச்சை அளிக்கத் தயாராக இருந்தது. எனினும், இம்முறை எவ்வித சிகிச்சை அளித்தாலும் காப்பாற்றப்படும் வகையில் அவரது உடல்நிலை இல்லை என்பது பெரும் வருத்தத்தை அளித்தது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தார்கள், உற்றார் உறவினர்கள், பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
08.04.2023