முன்னாள் மாவட்ட செயலாளர் திரு பட்டவராயன் மறைவு டாக்டர் கிருஷ்ணசாமி இரங்கல்

நினைவுகள்
s2 366 Views
  • Battavarayan
  • Battavarayan
Published: 29 Jun 2024

Loading

இரங்கல் செய்தி
தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளராக 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குலசேகர நல்லூரை சேர்ந்த திரு.பட்டவராயன் அவர்கள் மரணமெய்தி விட்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தொடங்கிய காலத்தில் இருந்து தொடர்ந்து நம்மோடு பயணித்தவர்; விசுவாசம் மிக்க தொண்டரும் செயல் வீரரும் ஆவார்; அவருடைய இழப்பு புதிய தமிழகம் கட்சிக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினருக்கும், புதிய தமிழகம் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex MLA
நிறுவனர் & தலைவர்
புதிய தமிழகம் கட்சி.
29.06.2024