திரு. ஆம்ஸ்ட்ராங் படுகொலை – புதிய தமிழகம் கண்டனம்.!
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி மிகுந்த வேதனையை தருகிறது. ஏறக்குறைய 25 வருடங்களுக்கு மேலாக பகுஜன் சமாஜ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அக்கட்சியின் கொள்கைகளை நிறைவேற்றப் பாடுபட்டு வந்தவர். அவர் இன்று தனது வீட்டின் அருகிலேயே கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. தனிப்பட்ட பகையானாலும், அரசியல் காழ்ப்புணர்வானாலும் இது போன்ற வன்முறைகள் தீர்வை தராது. இப்படுகொலையை வன்மையாக கண்டிக்கிறோம். கொலையில் ஈடுபட்டுள்ள உண்மைக்குற்றவாளிகளை கைது செய்து, உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது கட்சியினருக்கும் புதிய தமிழகம் கட்சி சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex MLA
நிறுவனர் & தலைவர்
புதிய தமிழகம் கட்சி.
05.07.2024