நிபா வைரசை தடுப்போம் மனித குலத்தை காப்போம் !

வலைப்பதிவுகள்

Author: வாழையூர் குணா

1
Published: 16 Sep 2023

அண்டை மாநிலமான கேரளாவில் பரவி வரும் நிபா வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரளா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

அந்த வகையில் நிபா வைரஸ் நோய் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளில் நாமனைவரும் அக்கறையுடன் செயல்பட வேண்டிய தருணம் இது.

நிபா வைரஸ் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு நோயை உண்டாக்கும் வைரஸ். பழந்தின்னி வவ்வால் கடிந்த பழங்களை சாப்பிடும் மனிதர்களுக்கு பரவி ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு நோய் பரவுகிறது.

நிபா வைரஸால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கு தடுப்பூசிகள் இல்லை.நோய் பாதிக்கப்படும் மனிதர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டும். நோய் எல்லா வயதுடையவர்களையும் பாதிக்கும் .

2

நோய் அறிகுறிகள்;

* மூளை அழற்சி

* கடும் காய்ச்சல் மற்றும் தலைவலி

* சோர்வு

* சுவாசப் பிரச்சனைகள்

* மனச் சோர்வு

* நிபா வைரஸ் மனிதனை தாக்கிய ஐந்து முதல் 15 நாட்களுக்குள் நோய் அறிகுறிகள் தென்படும்.

* நிபா வைரஸ் நோயிலிருந்து காக்க வேண்டிய வழிமுறைகள்;

* வவ்வால் மற்றும் பறவைகள் கொத்தி மரத்தில் இருந்து விழும் பழங்களை உண்பதை தவிர்க்கவும்.

* பதப்படுத்தப்படாத கள்/பதநீர் அருந்துவதை தவிர்க்கவும் .

* நோய் பாதித்த பகுதியில் வாழும் பன்றி, வௌவால் இடமிருந்து விலகி இருக்கவும்.

* நோய் பாதித்தவர்களின் எச்சில் இரத்த மூலம் நோய் பரவுவதால் நோயாளிகளை கவனிப்பவர்கள் கவனமாக இருக்கவும் .

*வீடுகளின் வெளிப்புறம் திறந்த பாத்திரத்தில் உள்ள நீரை குடிக்க வேண்டாம்.

* காய்கறிகள் பழங்களை கொதி நீரில் கழுவி பயன்படுத்த வேண்டும் .

* கைகளை சுத்தமாக சோப்பு வைத்து கழுவி உணவு உண்ண வேண்டும் .

* காய்ச்சலுக்கான ஆரம்ப அறிகுறிகள் இருப்பின் தாமதிக்காமல் அருகில் உள்ள அரசு சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.

இதனை பொதுமக்கள் கடைபிடித்து உயிர் கொல்லி நோயான நிபா வைரஸிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
என்ற அடிப்படையில்.

தென்காசி நாடாளுமன்றத் தொகுதி தமிழக – கேரளா எல்லை புளியரை செக் போஸ்டில் நிபா வைரஸ் தடுப்பு முகாமை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் இன்று 16.9.2023 காலை பதினொன்றரை மணி அளவில் கள ஆய்வை மேற்கொண்டார் .

* அந்த முகாமில் மூன்று இரண்டு பணியாளர்கள் மட்டும் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை முழுமையாக பரிசோதிக்காமல் ஒன்றிரண்டு வாகனங்களை மட்டுமே பரிசோதிப்பதை கண்டித்தார்.

* தமிழக எல்லைக்குள் நுழைகின்ற அனைத்து வாகனங்களையும் , அனைத்து பயணிகளையும் பரிசோதிக்க வேண்டும்.

* போதிய சுகாதாரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் .

* அரசு பெயரளவில் இந்த முகாமை நடத்தாமல் உண்மையான அக்கறையோடு நடத்த வேண்டும்.

* மக்கள் உயிர் மீது அரசு அக்கறை கொண்டு போர்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்.

* மக்கள் நலனில் தொடர்ந்து செயல்பட்டு வரும் மக்கள் நல போராளி தலைவர் டாக்டர் அய்யா அவர்களின் வேண்டுகோளை அரசு செவிமடுத்து நிபா வைரஸ் தாக்குதலிலிருந்து தமிழக மக்களை பாதுகாக்க வேண்டும் .

வாழையூர் குணா