மாஞ்சோலையும் மங்கா புகழ் கொண்ட மாமனிதர் டாக்டர் அய்யா அவர்களுடன் பயணம்…! புதிய தமிழகம் என்றென்றும் நிலைத்து நிற்கும் இமயம்!

வலைப்பதிவுகள்

Author: வாழையூர் குணா

Guna
Published: 31 Aug 2023

ஒரு குழந்தையை பிரசவிக்கும் போது நடக்கும் போராட்டம் அந்த தாய்க்கு மட்டுமே தெரியும் . அப்படிப்பட்ட ஒரு தாய்க்கு நிகரான தூய தலைவர் டாக்டர் அய்யா அவர்களை கொண்டாடி மகிழும் மாஞ்சோலை மக்கள்.

தொழிலாளர்கள் அனுதினமும் வதைபடும் போராட்டம் இந்த தாய் தலைவருக்கு மட்டுமே அந்தப் போராட்டம் தெரிந்தது அதனாலேயே அவர்களுக்கு விடுதலை சாத்தியமானது. அதை இன்று அவர்கள் வார்த்தைகளால் அதை சத்தியம் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆம் “ஐயா நீங்கள் தான் எங்களின் கடவுள் நீங்கள் இல்லை என்றால் எங்கள் வாழ்வு இல்லை.
உங்கள் காலடி படவில்லை என்றால் எங்களுக்கு கரிசனமும் தரிசனமும் இல்லை. உங்களை நாங்கள் கொண்டாட பிறந்திருக்கின்றோம். எங்களைப் பாதுகாக்க நீங்க பிறந்திருக்கிறீர்கள். இந்தப் பிறவி மட்டுமல்ல எத்தனை பிறவிகள் எடுத்தாலும், உங்களோடு நாங்கள் இருப்போம். ” மனம் உருகி பேசும் அந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வார்த்தையின் சத்தியமும் உண்மையும் அடங்கியிருந்தது.

ஒரு உண்மையான தலைவர் பின்னால் உண்மையாக பயணிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியை மாஞ்சோலை பயணம் மனதில் ஏற்படுத்தி உள்ளது . மேலும்
புதிய தமிழகம் கட்சியின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு எங்களை தயார்படுத்தி உள்ளது. சமதளத்திலிருந்து சுமார் 26 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அந்த மலைப் பகுதியில் எந்த அரசியல்வாதியும் தன் உடலை வருத்திக்கொண்டு அதுவும் சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாக ரொம்பவும் மோசமாக போய் வருவதற்கு எந்த வித உத்தரவாதமும் இல்லாத சாலை காலை 9.30 மணியளவில் தொடங்கப்பட்ட பயணம் மதியம் 1.30. மணியளவில்தான் மாஞ்சோலை சென்றோம் .

அப்படி என்றால் 4 மணி நேரம் கடுமையான பயணம். மிகவும் மோசமான சாலை . கடந்த 20 வருடமாக சாலையை செப்பணிடவில்லை. அந்த சாலையில் பயணித்து எங்களுக்கு எல்லாமே உடல் வலியும் அசதியும் ஏற்பட்டு போய்விட்டது . ஆனால் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் உடல் வலியையும், பொருட்படுத்தாமல் தன் உடலை வருத்திக் கொண்டு மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை சந்தித்து சுமார் ஆறு வருடம் ஆகிவிட்டது என்ற ஒரே தவிப்பில் எந்த இடர்பாடுகள் வந்தாலும் எத்தனை தொந்தரவுகள் வந்தாலும் எந்த தடைகள் வந்தாலும் அதையெல்லாம் தகர்த்தெறிந்து விட்டு அவர்களைப் பார்க்க வேண்டும் என்கின்ற இலக்கோடு மட்டுமே பயணித்துக் கொண்டிருந்த தலைவரின் பின்னால் நாங்களும் பயணிக்க தொடங்கினோம்.

அந்தப் பயணம் உச்சி மலையில் மாஞ்சோலை , நாலுமுக்கு ,ஊத்து ,குதிரை வெட்டி , பகுதி மக்கள் உள்ள மகிழ்ச்சியோடும் இல்லந்தோறும் ஆராத்தி தட்டுகளோடும், கையில் மாலையோடும், சால்வையோடும், வீதி எங்கும் சிவப்பு பச்சை வர்ண கொடியோடும் கையில் மலர் தூவி அவர் பாதத்திற்கு மலர்களை காணிக்கையாக்கி ஒரு தேவலோக தேவனை வணங்கி வரவேற்கின்ற அந்த பாங்கினை கண்டுகளித்த போது தான் அந்த கடுமையான பயணத்திற்கு அவர்களுடைய உண்மையான வரவேற்பும் , நெகிழ்ச்சியான சம்பவங்களும் நமக்கு மகிழ்ச்சியை தந்தது.

அந்த மகிழ்ச்சியை சொல்லில் விவரிக்க முடியாதது. இந்த நாட்டில் ஏன் சொந்த பந்தத்தில் கூட எவரிடமாவது பழகினால் ஏதாவது ஆதாயம் கிட்டுமா என்று எண்ணி தான் ஒவ்வொருவரும் பழக்க வழக்கங்களை தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவரால் நமக்கு என்ன பயன் அவரால் நமக்கு என்ன பயன் என்று சுயநலத்தோடு தான் அவரவரும் ஒரு நட்பை பேணிக் காத்து வருகிறார்கள். அல்லது ஒரு உறவைப் ஏற்படுத்தி வருகிறார்கள்.

தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியும் அல்ல அவர்கள் தேர்தல் நேரத்தில் வாக்கு அளிக்க வேண்டும் என்கின்ற நோக்கமும் இல்லை ஏன் இந்த சிரமப் பயணம் என்று கேட்டபோது ?

“அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். என் மீது விசுவாசமாக இருப்பார்கள். என்னை அவர்கள் தாங்கி பிடித்து வரலாற்று ரீதியான போராட்டங்களில் களத்தில் நின்ற உண்மையான பெண்கள் அங்கே வாழ்கிறார்கள் . அவர்களைப் பார்ப்பதில் எந்த உள்நோக்கமும் இல்லை. என் மீது இருக்கின்ற பரிசுத்தமான அன்பை அவர்கள் மீது இருக்கின்ற பரிசுத்தமான அன்பை பகிர்வதற்கு மட்டுமே இந்த பயணம் “என்று தன்மானத் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் என்னிடம் பகிர்ந்த போது ஒரு உண்மையான தலைவன் பின்னால் நாம் எதை வேண்டுமானாலும் இழந்து நிற்கலாம் என்கின்ற ஆணித்தரமான தன்னம்பிக்கை நமக்குள் பெருக்கெடுத்தது .

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வாக்கு செலுத்தி நாம் நாடாளுமன்றத்திற்கு செல்லவில்லை. சட்டமன்றத்திற்கு செல்லவில்லை அவர்களால் நமக்கு எந்த பயனும் இருக்கப் போவதில்லை . இன்னும் சொல்லப்போனால் மாஞ்சோலை தேயிலை தோட்ட போராட்டத்தால் தான் புதிய தமிழகம் கட்சியின் மனித சக்திகளையும் பொருளாதார இழப்பும் பெருமளவிற்கு ஏற்பட்டது .

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் உரிமை மீட்பு வரலாற்றில் தமிழகத்தில் அது போன்ற தொடர்ச்சியான போராட்டங்களை எந்த அரசியல் கட்சியும் எடுத்த சரித்திரம் இல்லை. சாலை மறியல் போராட்டமாக இருக்கட்டும். ஆர்ப்பாட்டமாக இருக்கட்டும். தொடர் முற்றுகைப் போராட்டமாக இருக்கட்டும் . டெல்லியில் நடைபெற்ற பேரணியாக இருக்கட்டும் . மாஞ்சோலை முதல் திருநெல்வேலியும், வால்பாறை முதல் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையிலும் நடைபெற்ற நடைபயணமாக இருக்கட்டும்.
வேலை நிறுத்தப் போராட்டமாக இருக்கட்டும். உள்ளிருப்பு போராட்டமாக இருக்கட்டும் அடையாள உண்ணாவிரதமாக இருக்கட்டும் . தடியடியும் கண்ணீர் புகை குண்டும் கல்லடியும் தாமிரபரணி படுகொலையையும் சந்தித்து புதிய தமிழகம் கட்சி வளர்ச்சியில் மிகுந்த சிரமத்தை சந்தித்தது தான் மாஞ்சோலையின் வரலாறு . அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பரிசுத்தமான அன்பை செலுத்திய ஒரே காரணத்திற்காக ஒரு பரிசுத்தமான தலைவர் தொடர்ந்து அவர்களை சந்திப்பதில் அந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும் இவரை சந்திப்பதில் இருக்கின்ற
இணைப்பும் பிணைப்பும்
தாயும் சேயும் போல
வானும் நிலவு போல
மண்ணும் மரமும் போல
மலரும் வாசனையும் போல
சதையும் நகமும் போல
பிரிக்க முடியாத ஒரு போராட்டப் பந்தம் நீண்ட நெடிய வருடங்களாக தொடர்கிறது என்றால் இதைவிட ஒரு சான்று வேறு ஏதும் இருக்க முடியாது .

நீங்கள் எத்தனை வருடம் எம்எல்ஏவாக இருந்தீர்கள்? எத்தனை வருடம் அமைச்சராக இருந்தீர்கள் ?எத்தனை முறை முதலமைச்சராக இருந்தீர்கள்? என்பதல்ல வரலாறு தனக்கு உத்தரவாதமான வாழ்க்கை இல்லை.வாழ இடமில்லை .சொந்த வீடு இல்லை. சொந்த நிலமில்லை. இந்த நிமிடம் வரை அவர்கள் வாழ்க்கைக்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை .ஆனாலும் தன் வீட்டு தோட்டத்தில் இருந்த பூக்களை பறித்து வந்து நாம் நடப்பதற்கு பாதை அமைத்துக் கொடுத்த தலைவரின் பாதம் பூக்களின் மீது படட்டும் என்று பூக்களை தூவுகின்ற பெண்களிடமும் அந்த மலைப்பகுதியில் இருக்கின்ற மரங்களை வெட்டி வந்து மேடையமைத்து கொடி தோரணம் கட்டி அழகு பார்த்து வரவேற்பு கொடுக்கின்ற ஆண்கள் மத்தியிலும்” ஐயா எங்கள் வீட்டில் வந்து சாப்பிடுங்கள் ”
என்று வீடு வீடாக கரிசனத்தோடு கூப்பிடுகின்ற தாய்மார்கள் இடத்திலும் ,தலைவரை பார்த்தவுடன் அவர்கள் முகத்தில் ஓராயிரம் மின்சார விளக்குகளின் சுடரொளி தெரிகிறது. என்றால் மாஞ்சோலை போராட்டத்தால் மட்டும் வந்த இணைப்பாக பிணைப்பாக கருதவில்லை . அதுவும் அங்கே பலதரப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். தேவேந்திர குல வேளாளர் மட்டும் அல்ல ஆதிதிராவிடர்கள் ,தேவர் இன்னும் பல்வேறு தமிழ்ச் சாதியினர்கள் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மத இன மக்கள் அங்கே வாழ்ந்து வருகிறார்கள்.

” அய்யா இந்த மாதா கோயில்ல வணங்கிட்டு போங்க” என்று ஆசையோடு கூப்பிடுகிறார்கள். அங்கு பெரும் சூறைக்காற்று அடித்து மெழுகுவர்த்தி நிற்கவில்லை. என்றாலும் அதை பற்ற வைத்து அதையும் தலைவரே தன் கையில் அனைத்து மெழுகுவர்த்தி பத்த வைத்து மாதாவையும் வணங்குகிறார்.

“அய்யா எங்கள் கருப்பண்ணசாமி கோவிலுக்கு வாங்க” என்று கூட்டி போகிறார்கள் அங்கேயும் சென்று அந்த வழிபாட்டையும் ஏற்றுக் கொள்கிறார் .அங்கே கிராமத்து சார்பாக பூசாரி சால்வை அணிவித்து மரியாதை செய்வதை ஏற்றுக்கொள்கிறார்.

அனைவரிடத்திலும் ஒரே அன்பு தான் ஒரே மரியாதை தான் அனைவருமே தலைவர் அவர்கள் மீது மாசில்லாத அன்பை வைத்திருந்தார்கள். தூய பரிசுத்தமான நட்பை வைத்திருந்தார்கள். அதற்கு ஈடு இணை இவ்வுலகில் வேற ஏதுமில்லை.

ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் வேண்டுமானால் அதிகார திமிரில் அலையலாம் ஆனால் டாக்டர் அய்யா அவர்கள் மீது அன்பும், பாசமும் கொண்ட ஒரு வரலாற்றுக் கூட்டம் மாஞ்சோலையில் மட்டுமல்ல பரந்து விரிந்த தமிழகம் எங்கும் தலைவர் வருகிறார் என்றால் காசு கொடுக்காமல், வண்டி வாகனங்களை எடுத்துக் கொடுக்காமல், கோட்டர் பிரியாணி கொடுக்காமல், எவ்வித பரிசுப் பொருட்கள் கொடுக்காமல், தன்னெழுச்சியாக தலைவரை பார்ப்பதற்கு இன்னும் லட்சோப லட்ச மக்கள் காத்திருக்கிறார்கள் என்றால் எதற்காக அவரால்தான் நாம் சுதந்திரமடைந்தோம். அவரால்தான் நாம் நிம்மதியாக வாழ்கின்றோம். அவர்தான் நமக்கு பாதுகாப்பு அவரை நாம் சந்திப்பதில் தான் நமது பிறவிப் பயன் உள்ளது என்பதனை உள்ளூர புரிந்து கொண்டவர்கள் தெரிந்து கொண்டவர்கள் தென் தமிழகத்திற்கு தலைவர் வந்தாலும், வட தமிழகத்திற்கு தலைவர் வந்தாலும் வழி எங்கும் நின்று அவரை வணங்கி விட்டு தான் செல்கின்ற ஒரு பாங்கை நாம் தொடர்ந்து தலைவருடன் பயணிப்பதன் வாயிலாக உள்ளூர புரிந்து கொள்ள முடிகிறது.

தென்காசி குற்றாலநாதர் கோயில் அருகே ஏற்பட்ட தீ விபத்தை பார்வையிட்டு வியாபாரிகளிடம் ஆறுதல் தெரிவித்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோது வழிநெடுவிலும் அனைவரும் தலைவர் அவர்களுக்கு வணங்கி வணக்கம் செலுத்தினார்கள். அதில் ஒருவர் கூட்டத்திலிருந்து அதிவேகமான புயல் பாய்ச்சலில் வந்து ” ஐயா நல்லா இருக்கிறீர்களா ? 30 வருடத்திற்கு முன்பு எனது தந்தையாரை உங்கள் மருத்துவமனைக்கு கொண்டு வந்தேன். அவரை நீங்கள் காப்பாற்றி உள்ளீர்கள். இன்று அவர் நல்லவிதமாக இருக்கிறார் உங்களை இந்த இடத்தில் சந்திப்பேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை” என்று பரவசம் அடைந்தார். அவர் நாடார் சமூகத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு நெகிழ்ச்சியான சம்பவம் குற்றாலநாதர் கோயிலில் தலைவரின் வருகைக்காக சிறப்பு பூஜையும், மரியாதையும் முடித்துவிட்டு கோவிலை விட்டு வெளியேறும் போது ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி ” அய்யா என் பிள்ளை நீட் தேர்வு எழுதி பாஸ் ஆகி இன்று மருத்துவ கனவை நிறைவேற்றி விட்டார். அந்த நீட் தேர்வுக்காக நீங்கள் பாடுபட்டதை நான் நன்கு அறிவேன் உங்களுக்கு என் குடும்பத்தின் சார்பாக நன்றி” என்று உணர்ச்சி பெருக்கோடு ஆனந்த கண்ணீர் மல்க சொன்னாரே அந்தத் தாய் குலத்தின் நன்றி நவிழ்தலின் போது உடன் இருந்த எனக்கு எல்லாம் பெருமிதமும், உற்சாகமும் ,கரைபுரண்டு ஒடியது என்றால் அது மிகை ஆகாது .

நாம் ஏதோ ஒரு சாதாரண கட்டப்பஞ்சாயத்து செய்கின்ற , மேடையில் மட்டும் முழகுகின்ற வாய்ச்சவடால் அடிக்கின்ற ஒரு தற்குறி தலைவர் பின்னால் பயணிக்கவில்லை. உலக மக்கள் எல்லாம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்ற ஒரு உத்தமர் டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில் பயணிக்கும் அனைவருக்கும் இந்த பிறவியில் இதைவிட என்ன நாம் சாதித்திடப் போகிறோம் என்ற கர்வம் எனக்குள் எழுந்தது.

பார்ப்பவரையெல்லாம் புதிய தமிழகமாக மாற்ற வேண்டும். பேசுவதுயெல்லாம் புதிய தமிழகம் சாதனையாக இருக்க வேண்டும்.எழுதுவதெல்லாம் புதிய தமிழகம் செய்த சரித்திர சாதனைகளாக இருக்க வேண்டும். என எனக்குள்ளே உத்வேகமானது.
தலைவருடன் நெருக்கமும் பயணமும் எம்மை மென்மேலும் செழுமைப்படுத்துகிறது.

இதுபோன்ற லட்சோப லட்சம் தொண்டர்களுக்குள் நானும் ஒருவனாக …
வாழையூர் குணா.