தென்காசி நாடாளுமன்றத் தொகுதி டாக்டர் அய்யா அவர்களின் வெற்றியே ! தென் தமிழகத்தின் திறவுகோல் !

வலைப்பதிவுகள்

Author: வாழையூர் குணா

3
Published: 14 Oct 2023

இந்தியா சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் , தமிழகத்தில் திராவிட கட்சிகள் தங்களை வளர்த்துக் கொள்வதற்காக குறிப்பாய் தென்தமிழகத்தில் திட்டமிட்டு உருவாக்கிய சாதிய முரண்பாடுகளை களத்திலே சந்தித்து, அந்த கனத்திலேயே வென்று அவற்றையெல்லாம் களைந்து , “மனிதனுக்கு மனிதன் சமம்” எனும் உயரிய லட்சியத்திற்காக பல்வேறு போராட்டங்களை புதிய தமிழகம் கட்சி முன்னெடுத்து வெற்றி கண்டுள்ளது.

தென் தமிழகத்தின் அமைதியின்மைக்கு, காரணம் வேலையின்மை ஆகும் . என்ற புரிந்துணர்வுடன் தலைவர் அவர்கள் அதி தீவிரமாக தென் தமிழகத்தில் தொழில் வளம் , அமைதி, சமத்துவம் , சகோதரத்துவம் ,சமூக நல்லிணக்கம் , ஆகியவற்றியே தனது கொள்கையாக கொண்டு அதனை நிறைவேற்றும் பொருட்டு தொடர்ந்து கால் நூற்றாண்டுக்கு மேலாக தென் தமிழகத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்ட சரித்திர சாதனைக்கு சொந்தக்காரர் டாக்டர் அய்யா அவர்கள் என்றால் மறுப்பவர் எவரும் இல்லை.

எதையும் தீர்வு காணுகின்ற அல்லது எதற்கும் முடிவு காணுகின்ற குணஇயல்பு கொண்டவர். தலைவர் மேம்போக்காக அரசியல் செய்தவர் அல்ல எதையும் ஆய்ந்தறிந்து அதற்கான தீர்வை தந்தவர். உதாரணத்திற்கு ஒரு சிலவற்றை குறிப்பிட விரும்புகின்றேன் .

2008 ஆம் ஆண்டு தமிழகத்தின் தொழில் வளங்கள், தொழிற்சாலைகள் வட மாவட்டங்களில் அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அமையப் பெற்றது. குறிப்பாக திமுக அரசு 30 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 27 வட தமிழகத்திலும்,மூன்று மட்டுமே தென்தமிழகத்தில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது .

தென்தமிழகத்தை முற்றாக புறக்கணிப்பதாக எண்ணி புதிய தமிழகம் கட்சி, தென் தமிழக மக்கள் இடையே மனித சங்கிலி போராட்டம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல், பொதுக்கூட்டம் ,மாநாடு என தென் தமிழகத்தில் தொழில் வளம் பெருகுவதற்கு முனைப்பாய் புதிய தமிழகம் கட்சி முழு மூச்சாக செயல்பட்டது .

2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 தென் தமிழகத்தில் தொழில் வளம் பெறுக வலியுறுத்தி கடையநல்லூர் மாவட்ட மாநாடு, மார்ச் 1 புதுக்கோட்டை மாவட்ட மாநாடு, மார்ச் 2 நெல்லை மாவட்ட மாநாடு, மார்ச் 7 தூத்துக்குடி மாவட்ட மாநாடு, மார்ச் 8 சிவகங்கை மாவட்டம் மாநாடு ,மார்ச் 9 ராமநாதபுரம் மாவட்டம் மாநாடு என புதிய தமிழகம் கட்சியின் பேரழுத்தத்தின் காரணமாக தென் தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களை உள்ளடக்கி, திருநெல்வேலியில் கங்கைகொண்டான் தொழில் பூங்கா கொண்டுவரப்பட்டது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையப்பெற்றது . மேலும் சாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள், மருத்துவ வசதிகள், இன்ன பெற அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட புதிய தமிழகம் கட்சி அடித்தளம் இட்டுள்ளது . அதனாலேயே தென் தமிழக மக்களிடையே சாதி, மதம், மொழி, இனம் கடந்து அபரிதமான நம்பிக்கையை தலைவர் பெற்று வருகிறார் .

தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினராக பத்தாண்டு காலம் பொறுப்பு வகித்த காலத்தில் சம்பந்தப்பட்ட தொகுதியை தவிர அனைத்து பகுதிகளுக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டார். அடிப்படை வசதிகளான சுகாதாரம் ,கல்வி ,குடிநீர் , சாலை வசதி , பள்ளி கட்டட வசதி, பள்ளி தரம் உயர்த்துதல் , போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் ,முழுமையாக நிறைவேற்றி தந்தார் .

அப்படிப்பட்ட ஆளுமை மிக்க தலைவரை சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலும் ,அற்ப பணங்களை பெற்றுக் கொண்டும், தென்காசி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை திராவிட கட்சிகள் நயவஞ்சகத்தோடு பறித்து வந்துள்ளனர் .

அந்த பேராபத்தை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள் . ஆகவே! இனி வருகின்ற காலம் , புதிய தமிழகத்தின் பொற்காலம் , தென் தமிழக மக்களின் விடிவுகாலம், என்பதை மட்டும் அச்சாரம் இட்டு அனைத்து தரப்பு மக்களிடையே டாக்டர் அய்யா அவர்களின் உழைப்பு, தியாகம் ,அர்ப்பணிப்பும் அனைத்து தரப்பு மக்களின் ஆழ்மனதில் பதிந்து மிளிரத் தொடங்கியுள்ளது .

காலம் கனிந்து வரும் இத்தருணத்தில் நாமனைவரும் கண்துஞ்சாது பணி செய்வோம்.தென்காசி வெற்றியே! தென் தமிழகத்தின் வெற்றி! தென் தமிழகத்தின் வெற்றியே! ஒட்டுமொத்த தமிழகத்தின் வெற்றி! எனும் உத்வேகத்துடன் தேர்தல் பணியாற்றுவோம்!
நமக்கான ஆட்சியதிகாரத்தை நாமே ! வென்றெடுப்போம் !

வாழையூர் குணா .