புதிய தமிழகம் கட்சி 27 ஆம் ஆண்டு துவக்க விழா

வலைப்பதிவுகள்

Author: வாழையூர் குணா

Dr Krishnasamy 2
Published: 26 Nov 2023

டாக்டர் அய்யா அவர்கள்
சொல்லல்ல தமிழர்களின் தவம்!
மாநாட்டிற்கு அனைவரும் வரவும்!!

சமூக நோய்களை தீர்க்க வந்த
எங்கள் புரட்சி செங்கோல் !
வீழ்ந்து கிடந்த மக்களை
எழவைத்த எழுச்சி நெம்புகோல்!

சமுதாயத்தை புரட்டிப் போட்ட
அறிவுலகப் பூகம்பம் !
மண்ணின் பூர்வீகக் குடி மக்களின்
தலை நிமிர்வுக்கான ஆரம்பம்!

கையறு நிலையில் இருந்த
மக்களின் துயரத்தைப் போக்க வந்த பேரானந்தம் !
ஏழை எளியோர்களின் ஏகாந்தம் !

சுகபோகமான பணியை துறந்து துன்பங்கள் நிறைந்த
குரல் அற்றவர்களின் விடுதலைக்காக
அர்ப்பணித்த அப்பழுக்கற்றத் தலைவர்!
உண்மை; நேர்மையின்
அவதார புருஷர் !

இழந்த உரிமை மீட்டெடுக்க
ஆட்சியதிகாரத்தை வென்றெடுக்க
ஆதிக்க திமிரை தவிடு பொடியாக்க
தமிழனமே! திரண்டு வா!
அறைகூவலிட்ட விடுதலையின்
வீரிய ஆத்மா!
ஒன்றுபட்டு திரண்டெழுந்தால்
இந்தப் படை தோற்குமா!
ஆவேசமாக அணி திரட்டிய ஆளுமை !
உங்கள் பிறப்பால் எங்களுக்கு மேன்மை!

சமுதாயம் தழைக்க
அவலம் போக்க
தன்னை வருத்திக் கொண்ட தன்னலமற்ற தன்னெழுச்சியே !
நடைமுறை புரட்சியே !
தலைமுறை புகழ்ச்சியே!

ஒடுக்கப்பட்டிருந்த சமூகத்தில் ஒய்யாரமாக குரல் எழுப்பி
அறிவை ஆயுதமாக்கிய
மனிதப் பேராயுதம்!
உங்கள் இமாலய சாதனைகளை
எழுத போதாது காகிதம்!

காலங்காலமாய் கட்டவிழ்த்திருந்த ஆணவ சாதியத்தை அறுவடை செய்ய வந்த ஒற்றை மனித படை!
காலம் தந்த கருத்தியல் விடை!

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் சரித்திரம் படைத்த சகாப்தம்!
அய்யா கருப்பசாமி – தாமரையம்மாள்
தந்த வரப்பிரசாதம் !

எத்தனை இன்னல்கள்
எத்தனை துயரங்கள்
அத்தனையும் தவிடு பொடியாக்கிய
எம்மின இடி முழக்கம் !
சமத்துவத்திற்கான நடமாடும் பல்கலைக்கழகம்!
திராவிடத்தின் போலி முகத்திரையை கிழித்தெரியும் கலங்கரை விளக்கு
புதிய தமிழகம் !

தலை குனிவும்
தலைமுறை குனிவும்
இனி வேண்டாம் எழுந்து நில்;
துணிந்து செல்;
ரத்த சொந்தங்களுக்கு
யுத்த களம் தந்த
எமது சமூகப் போர் வீரர் !
பட்டியல் வெளியேற்ற பிரகடனத்தை நிறைவேற்ற இவரைத் தவிர
வேறு எவர்!

தினம் தினம் தூங்காது விழித்திருந்து சமூகத்தை வழி நடத்தும்
எங்கள் குல விடுதலைப் போராளி!
இருண்ட சமூகத்தில்..
வெகுண்டெழுந்த பேரொளி !

அநீதிக்கு எதிராக சீற்றத்தோடு எழுந்து..
ஏற்றதோர் ஆட்சியதிகாரத்தை அமல்படுத்த அக்கினி அலையாய் பிரளய பீரங்கியாய் பீறிட்டெழு… தோற்குமா இந்த போரினம் ?

தைரியம் இழந்த மக்களுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையும் போதித்த போதிமரம்!
நீங்கள்தான் எங்களுக்கு ஆக சிறந்த வரம்!

மாவீரன் சுந்தரலிங்கம் பெயரில் போக்குவரத்துக் கழகம் ;
தியாகி இமானுவேல் சேகரன்
புகழை உலகறிய செய்த உத்தமர்! தமிழர்களின் உரிமையை , ( இலங்கைத் தமிழர்களுக்காக, மீனவர்களுக்காக, நெசவாளர்களுக்காக உரிமையை மீட்டவர் )
வென்றெடுத்த வீராதி வீரர்!

நமக்கான சுதந்திரத்தை நிலை நாட்டிய ஒப்பற்ற ஒருவர் கொண்ட ராணுவம்!
“மனிதனுக்கு மனிதன் சமம்”என்பதே
தங்களின் ஒப்பற்ற குணம்!

தன் இனத்திற்கும்;
தன்மானத்திற்கும் ;பங்கம் என்றால் பதறி எழும் உங்கள் நெஞ்சம்!
அதனாலே ஏழை எளியோர்கள் அடைந்தார்கள் உங்களிடம் தஞ்சம் !

சுடுநீராய்
சுட்டெரிக்கும் நெருப்பாய்
கொதிக்கும் கொதிகலனாய்
வெப்ப சூரியனாய்
எப்ப நீ உருவெடுப்பாயோ அப்போதுதான்
சாதிய வன்கொடுமைகள் மடியும்!
நமக்கான நற்பொழுதும் விடியும் !

சமூக விரோதிகள் ; சாதி வெறி கும்பல்
உங்களை கொல்ல வீசிய வெடி குண்டை கொள்கையால் கொன்று குவித்தாய் !
கொள்கை; லட்சியத்தால்
வரலாற்றில் ஜொலித்தாய்!

உங்கள் பாதம் பட்ட இடமெல்லாம்
பற்றி எரிந்தது குடிசைகள் அல்ல
வன்கொடுமை செய்தவர்களின் நெஞ்சம் !
உமது போர்க்குணத்தால் பகைவர்களிடம் தீர்ந்து போனது வஞ்சம் ,!

துணிந்து நில்; போராடி வெல்;
என்ற தாரக மந்திரத்தை சொல்லும் வாழும் பேராளுமை சாதனை சரித்திரம்!
எங்களை ஆளும்
அன்பின் அஸ்திவாரம்!

நமக்கான விடுதலையை
நம்மால் தான் பெற முடியும் என ஆங்காரமாக சொன்ன
ஆத்மார்த்த அடையாளம் !
எங்கள் எழுச்சியின் பூபாளம் !

கொடியன் குளத்தில்;
வரலாற்றைப் பதித்த சீர்திருத்தவாதி !
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு முதலாளிக்குமான வர்க்க போராட்டத்தை முன்னின்று நடத்திய உண்மையான பொதுவுடமைவாதி!

தமிழகத்தில் கட்டுப்பாடு இல்லாத திரைத்துறையை நீங்கள் கட்டுப்படுத்தியதுண்டு! ஆம்;
தமிழில் பெயரிடு;; சாதி பெயரை கைவிடு; என்று நெஞ்சை நிமிர்த்தி சொன்ன முதல் நெருப்பு சக்கரவர்த்தி !
இருள் சூழ்ந்த சமூகத்தில்
நாங்கள் ஏந்திய மெழுகுவர்த்தி !

இப்போதெல்லாம் திரைப்படத்திற்கு பேரிடும் பொழுது நீங்கள் கவனத்தில் கொள்ளப்படுகிறாய்!
அதனாலே! திரைத்துறை கருத்தியல் சுதந்திரத்தை படைத்த படைப்பாளி! அநீதிக்கு எதிராக போராடி வரும் ஓய்வறியா உழைப்பாளி!

இன மக்களை பணையம் வைத்து
சம்பாதிக்கும் அரசியல் வியாபாரிகள் மத்தியில் உயிரை பணையம் வைத்த உயர்ந்த உயிர்;
எங்களையெல்லாம் வழிநடத்துகின்ற
வளர்பிறை;

அலங்காரமாக பேசுவதில்லை
அடுக்கு மொழியில் பேசுவதில்லை
எதுகை மோனையில் பேசுவதில்லை
ஆனால் ஆக்கப்பூர்வமாக பேசுவதுண்டு!
ஆழமாக பேச உங்களைத் தவிர
வேற யார் உண்டு!

போதை; புகை;
மனித குலத்திற்கு பகை
கால் நூற்றாண்டாக
போதை வஸ்துக்களை ஒழிப்பதற்கு நீங்கள் செய்யும் மானசீக பிரச்சாரம் !
மனித குலத்தை காத்திடும்
மனிதநேய அட்சாரம் !

மக்களின் விடுதலைக்காக
மனித உரிமைக்காக
மண்ணுரிமைக்காக
மனித நேயத்திற்காக
மானுட உயர்வுக்காக
ஓங்கி குரல் கொடுக்கும்
ஒப்பற்ற சமூக சிலிர்ப்பு !
உங்களால்தான் எங்களுக்கு மதிப்பு!

புரையோடிய சமூகத்தை சீர்படுத்த வந்த எழுச்சிமிக்க எரிமலை ;
எவரிடமும் எதற்காகவும் தலைவணங்காத போர்க்குணமிக்க இமயமலை !

தைரியம் இழந்த சமூகத்தை
வெகுண்டெழ வைத்த
மனித பீரங்கி!
ஏழைகளை தாங்கி நிற்கின்ற சுமைதாங்கி!

மக்கள் புரட்சியை விதைத்து
இன எழுச்சியை அறுவடை செய்த அறிவார்ந்த புயல் ;
மனிதத்துவம் காத்த
மருத நிலத்தின் வயல்!

அடிமைத்தனத்தை அடியோடு ஒழிப்பதற்கும்;
அதிகாரத்தை பிடிப்பதற்கும்;
ஆக்ரோஷமாக ஆர்ப்பரித்து எழுந்த அதிவேக விடுதலைச் சின்னம்!
உங்கள் அறைகூவலால்தான் பகைவர்களிடமிருந்து வற்றி போனது தீய எண்ணம் !

ஒடுக்குதல்: ஒதுக்குதல்: சுரண்டல்: இவற்றிற்கு எதிராக போரிடும் கூர்மை மிகுந்த போராயிதம் !
ஜனநாயகம் அநியாயமாக
அலங்காரம் இட்டு வலம் வந்தபோது ஒட்டுமொத்த சமூக பலத்தையே!
தன் பக்கம் திருப்பி தகர்த்தெறிந்த தன்னுணர்வாளர்!
சாதிய மூர்க்கவாதிகளை மோதி மூக்கறுத்த முன்னணி தலைவர் !

மனித உரிமை;
மனிதாபிமானம் ;
மனிதம் ;
மனித இனமாண்பு இவை மீறப்பட்ட இடமெல்லாம் மீறி எழுந்த மாவீரர்!
மனித உரிமைகளை மீட்டெடுத்த மாமனிதர் !

மானுடத்தில் சாதிகளினுடைய மரியாதையை மறுபரிசீலனை செய்ய ஆவணம் செய்த எங்கள் சாசனம்!
பாகுபாடு; வேறுபாடு; கூறுபாடு ;இத்தனைக்கும் இடையில் ஒன்றுபடு; என்று பிரகடனப்படுத்திய எங்கள் பிரபஞ்சம் !

உங்கள் காலடி படாத இடங்களில் தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது.
பிணி தீர்க்கும் மருத்துவரே..
உங்கள் பாதங்களை அங்கு பதிவு செய்யுங்கள்!
பாவங்கள் நிறைந்த
சாதிய சமூகம் பரிசீளிக்கட்டும் உங்களின் மேன்மைமிக்க சிந்தனையை..

ஒடுக்குதலுக்கு முன்னுரிமை
இட ஒதுக்கிட்டுக்கு பின்னுரிமை
தமிழர்களுக்கு எதிரான திராவிடத்தின் சூட்சமத்தை அம்பலப்படுத்திய வெள்ளையறிக்கை வேந்தர்!
நூறாண்டு கோரிக்கையான தேவேந்திர குல வேளாளர்..
அரசாணை பெற்று தந்த பேரரசர்!

கண்டதேவியில் தேர் இழுக்க உரிமையைப் பெற்றாய் !
இரட்டை குவளை முறையை ஒழித்தாய் !
ஏழு தமிழர்கள் சுவாசிக்க சுவாசம் தந்தாய்!
தென் தமிழகத் தொழில் வளர்ச்சிக்காக முன் முயற்சி எடுத்து வென்றாய் !
தன்னை நம்பி வந்த மக்களுக்காக
அர்ப்பணித்துக் கொண்டாய்!
சம பங்கு; சம உரிமை நிலைநாட்ட தன்னையே! தந்து கொண்டிருக்கிறாய்!

புரையோடிய பழைய தமிழகத்தை புதிய தமிழகமாக்க புத்துயிர் கொள்கை வடித்த வரலாற்று சிற்பி !
இளைய தலைமுறை பிள்ளைகளுக்கு புதிய தமிழகம் போராட்ட வரலாற்றை கற்பி !

அறிவாலால் அரிவாளை ஒழித்த
பேரறிவின் அர்ப்பணம் !
எங்கள் உயர்ந்த சொப்பனம் !

உறுதியின் மாமலை
உமது அர்ப்பணிப்பிற்கு ஏது விலை?
உமது பிறப்பால்
எங்கள் வாழ்வு சிறப்பானது!

நீங்கள் வாழும் காலத்தில்
நாங்கள் வாழ்வதுதான் வரலாறு!
சமூகப் பிணியை தீர்த்தீர்கள்.
ஆட்சியதிகாரத்தில்..
எங்களை அமர வைத்து
அழகு பார்க்க காத்திருக்கும்
அரசியல் ஆசானை வணங்குகிறேன் பாரு!

1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு
ராமநாதபுரத்தில்.. எதிர்வரும்
டிசம்பர் 15.12.2023 அன்று
சிவப்பு பச்சை வர்ணக் கொடியை கையில் ஏந்தி!
புதிய தமிழகம் கொள்கையை இலட்சியத்தை நெஞ்சில் சுமந்து டாக்டர் அய்யா அவர்களின்
தலைமை ஏற்போம்!
மாநாட்டில் பங்கேற்போம்!!
ஆட்சியதிகாரத்தை வென்றெடுப்போம்!
மது இல்லா…
புதிய தமிழகம் படைப்போம்!!!
வாரீர்!வாரீர்!! வாரீர்!!!
வாழையூர் குணா…