தென் தமிழகத்தின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்ட தலைவர் டாக்டர் அய்யா அவர்கள்!. கட்டியம் கூறும் அவருடைய செயல்பாடுகள்!

கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக தென் தமிழகத்தில் ஏற்பட்ட சாதிய முரண்பாடுகளுக்கும் ,சாதிய பகைமைகளுக்கும் அடிப்படையாக அமைந்தது வேலை இன்மை ஆகும் .
தென் தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு சாதிய கலவரங்களை ஆய்வு செய்த குழுவினர்கள் கூட வேலை வாய்ப்பை உருவாக்கக் கூடிய வகையில் தொழிற்சாலைகளோ தொழில் வளங்களோ இல்லை அதனால் தான் இது போன்ற சாதிய பிரச்சனை உருவாகிறது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்கள்.
சாதி பகமையை மறந்து சம நீதி ,சம உரிமை, சம பங்கு ,சமத்துவம், சமய நீதி போன்ற உயரிய கொள்கை சித்தாந்தங்களை டாக்டர் அய்யா அவர்கள் பொது மக்களிடையே ஏற்படுத்தியதன் வாயிலாக
தென்காசி நாடாளுமன்றத் ” தேர்தல் வெற்றியே தென் தமிழகத்தின் திறவுகோல்” எனும் அறைகூவலோடு தேர்தலை சந்தித்துக் கொண்டிருக்கின்றார். தென் தமிழகத்தில் தொழில் வளம் பெருகிட பல்வேறு தொழிற்சாலைகளை உருவாக்கிட புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் ,ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், என டாக்டர் அய்யா அவர்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.
அதனடிப்படையில் தான் திருநெல்வேலி மாவட்டத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் 50 கம்பெனிகளைக் கொண்ட கங்கைகொண்டான் தொழில் பூங்கா கொண்டுவரப்பட்டது . மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை துவங்கப்பட்டது. அதே போன்று தென்தமிழகத்தில் தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்க வலியுறுத்தினார் . அதன் பிறகு கடந்த ஆட்சியில் தென்காசி புதிய மாவட்டமாக அமையப்பெற்றது .
தற்போது கோவில்பட்டியை மையமாகக் கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி வருகிறார்கள். அதுவும் நாளடைவில் நிறைவேறும்.
தான் ஆட்சியில் பங்கு பெற்றாலும் பெறாவிட்டாலும் ,தென் தமிழகத்தின் வளர்ச்சி மீதும் தமிழக மக்கள் மீதும் , அதி தீர பற்று கொண்டு செயல்படுகின்ற ஒரு மகத்தான தலைவர் டாக்டர் அய்யா என்றால் அது மிகையாகாது. உதாரணத்திற்கு ..
1996 – 2001 மற்றும் 2011- 2016 என பத்தாண்டு காலமாக சட்டமன்றத்தில் குரல் அற்றவர்களின் குரலாக ஒலித்தவர். சட்டமன்றத்தில் அதிக நேரம் மக்கள் பிரச்சினையை பேசியதில் கின்னஸ் சாதனை புரிந்தவர். வெள்ளை அறிக்கை போராட்டம் அனைவருக்கும் ஆன அரசு வேலையை உறுதி செய்தது , மாஞ்சோலை தொழிலாளர் உரிமை மீட்பு, கண்டதேவி தேர் இழுக்கும் உரிமை மீட்பு , இரட்டைக் குவளை முறை ஒழிப்பு , ஏழு தமிழர் விடுதலை ,காவிரி மேலாண்மை வாரியம் அமைய குரல் எழுப்பியது, மனித உரிமை காப்பு , ஏழை எளிய விளிம்பு நிலை மக்களின் வாழ்வுரிமையை மீட்டெடுத்தது , பெண்ணுரிமை பேணிக் காத்தது , தொழிலாளர்களின் உரிமைகளைக் வென்றெடுத்தது , இப்படி அடுக்கடுக்கான சாதனைகளை செய்தவர் .
தூத்துக்குடி மாவட்டம் , ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் டாக்டர் அய்யா அவர்கள் வெற்றி வாகை சூடிய பிறகு அந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி, சுகாதார வசதி , பள்ளி கட்டிட வசதி , ஆரம்பக் கல்வி நிலையங்களை நடுநிலை பள்ளியாகவும் ,நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளியாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளியாகவும், தரம் உயர்த்தியது . பள்ளி கல்லூரி வசதி என அனைத்து அடிப்படை வசதிகளையும் முழுமையாக நிறைவேற்றிய பெருமைக்குரியவர். இப்படி எண்ணிலடங்காத இமாலய சாதனைகளை புரிந்தவர்.
தேர்தலில் யார் யாரோ வெற்றி பெறுகிறார்கள் ஆனால் தென்காசி தொகுதி வளர்ச்சி குறித்து நாடாளுமன்றத்தில் ஒரு நாளும் பேசியது இல்லை . புதிய தொழிற்சாலைகளைக் கொண்டு வந்ததும் இல்லை . அல்லது செண்பகவல்லி தடுப்பு சுவரை சரி செய்து நதிநீர் சிக்கல்களை தீர்த்து வைத்ததும் இல்லை . விவசாய விளைபொருளான காய்கறிகள், மலர்கள் போன்றவற்றை பதப்படுத்துகின்ற குளிர்சாதன கிடங்குகள் கொண்டு வரவும் இல்லை .
இப்படி எந்த விதமான அடிப்படை வளர்ச்சியையும் ஏற்படுத்தாதவர்கள் தான் இந்த தொகுதியில் வெற்றி பெறுகிறார்கள் என்றால் வாக்காளர்கள் சிந்திக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது .
டாக்டர் அய்யா அவர்கள் மக்கள் பிரச்சனையில் தினம் தினம் கவனம் செலுத்தி வருகிறார். தமிழக எல்லையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டும் சுமார் 30,000 டிஎம்சி அளவுக்கு மழை நீர் வீணாக அரபிக் கடலில் கலக்கிறது .
தலையணைப் பகுதியிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் செண்பகவல்லி தடுப்பு சுவரில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் பெய்யும் மழை தண்ணீர் அரபிக் கடலில் கலக்கிறது. இங்கு உள்ள 20 மீட்டர் தடுப்பு சுவரை சரி செய்தால் தென்காசி , விருதுநகர் , தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் வளம் பெரும் விவசாயிகள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
செண்பகவல்லி தலைப்பகுதியான தலையணை பகுதியை 15.9.2023 அன்று டாக்டர் அய்யா அவர்கள் ஆய்வை மேற்கொண்டு ஊடகவியலாளிடம் செண்பகவல்லி தடுப்பு சுவர் உடைப்பை மத்திய மாநில அரசுகள் உடனடியாக சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
கடையநல்லூரில் குடிநீர் பஞ்சத்தை போக்கும் வகையில் 13 குடிநீர் ஆழ்குழாய் கிணறுகளை ஆய்வு செய்தார். அதே பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆய்வை மேற்கொண்டு மருத்துவமனையில் உள்ள குறைபாடுகளை ஊடகவியலாளிடம் முன் வைத்தார் . தலைவரின் ஆய்வுக்குப் பிறகு தென்காசி மாவட்ட ஆட்சியரும் கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்குள் ஆய்வு மேற்கொண்டது பொதுமக்கள் இடையே வரவேற்பை பெற்றது , தமிழக கேரளா எல்லையான புளியறையில் நிபா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஆய்வையும் மேற்கொண்டார் .
தமிழக மக்களை சீரழித்து வருகின்ற மது ஒழிப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டு ஒரு ஆரோக்கியமான தமிழ்ச் சமுதாயம் உருவாவதற்கும் , மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயலாற்றுவதற்கு ஒரு மகத்தான முன்னுதாரணமான தலைவராக டாக்டர் அய்யா அவர்கள் திகழ்ந்து வருகிறார்.
எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் உண்மையான தலைமையின் மீது பற்று கொண்டு தலைவர் அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என ஆங்காங்கே பொது மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளதை வரவேற்கிறோம்.
வாழையூர் குணா..






