தமிழக அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கக் கூடிய வகையில் சகாப்தம் படைத்த கட்சி புதிய தமிழகம்!

தனது முன்னோர்களோ அல்லது தன்னுடைய வாரிசுகளோ அல்லது வேறு எவரோ கஷ்டப்பட்டு நிறுவி வைத்த கட்சிக்கு தலைவரானவர் அல்ல .
மண்ணின் பூர்வ குடிமக்கள் மற்றும் ஏழை,எளிய , விளிம்பு நிலை மக்கள் மற்றும் ஏதுமறியாத அப்பாவிகளின் வாழ்வாதாரம் முற்றாக முடக்கப்பட்டும், அரசியலதிகாரத்தை மழுங்கடித்தும், சாதியாலும், மதத்தாலும், மொழியாலும், இனத்தாலும் பாகுபாடு செய்து திராவிட கட்சிகள் கோடான கோடி மண்ணின் பூர்வீகக்குடி மக்களை வஞ்சித்தும், குறிப்பாக தேவேந்திர குல வேளாளர்களை புறக்கணித்தும் ,அதிகார பகிர்வு இன்றி அவர்களை வெறும் ஓட்டு வங்கிகளாக தொடர்ந்து பயன்படுத்தியே வந்துள்ளனர்.
மண்ணின் பூர்வீககுடி மக்கள் வாழ்வில் ஒரு நல்ல துணிமணிகள் கூட எடுத்து உடுத்த முடியாத வறிய நிலையிலேயே அவர்களை வைத்து ,அடுத்த வேலை உணவுக்கு யாரிடமாவது கையேந்த வேண்டிய அவல நிலையிலேயே வைத்திருந்தனர். உடுத்த உடையும், உண்ண உணவும், இருக்க இடமும், ஏதுமற்ற அவர்களிடையே அடுக்கு மொழிகளில் பேசியும், எழுதியும், ஏமாற்றியும் ,வஞ்சித்தும் வந்த திராவிட கூட்டங்கள் தான் இந்த மண்ணின் பூர்வீககுடி மக்கள் ஆன தேவேந்திர குல வேளாளர்களுக்கு ஆட்சியதிகாரத்தில் பங்கு கொடுக்கவில்லை. அமைச்சரவையில் பங்கு இல்லை.( ஆதிராவிடர் நலத்துறையை தவிர ) கட்சியில் முக்கியத்துவம் இல்லை ( துணை இணை என உப்புக்கு சப்பானியான பொறுப்புகள்) மாறாக அவர்கள் வாக்குகளை எல்லாம் இலவசங்களாக கபளிகரம் செய்து அவர்களை தொடர்ந்து ஏமாற்றிய ஒரு சூழல்தான் நிலவி வந்தது .
இந்நிலையில்தான்
டாக்டர் ஐயா க. கிருஷ்ணசாமி M.D.,EX.MLA., அவர்கள் தனது இளம் பிராயத்தில் இருந்து, தான் பிறந்த சமூகத்தையும், தமிழ்ச் சமூகத்தையும் உற்று நோக்கி ஏன்? எதற்கு? என்ன ? பகுத்தறிவு வினாக்களோடு ஒவ்வொன்றுக்கும் விடை கண்டுபிடித்து அதற்கான தீர்வையும் தேடி மண்ணின் பூர்வீககுடி மக்களை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். என்ற முனைப்போடு உலக அரசியல் வரலாற்றில், இந்திய அரசியல் வரலாற்றில், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது கட்டமைக்கப்பட்ட இயக்கத்தின் பேரில் தேர்தல் களத்தில் நின்று அதனூடாக வெற்றி வாகை சூடி மண்ணின் பூர்வீக குடி மக்களுக்கு திராவிட ஆட்சியாளர்கள் செய்த சூழ்ச்சியை அம்பலப்படுத்தினார்.
மண்ணின் மைந்தர்கள் அரசு வேலைவாய்ப்புகளிலும் வஞ்சிக்கப்பட்டு , வழிபாட்டு உரிமையிலும் சரி, வாழ்வுரிமைகளும் சரி ,மண்ணுரிமையிலும் சரி அவர்கள் செய்த பித்தலாட்டங்களை , பிணை சுருட்டுகளை அவர்களுடைய நயவஞ்சகத்தன்மையை அவர்களின் போலி பச்சாதானங்களை மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் தோல் உரித்து சமூக நீதி பேசிய திமுக ஆட்சியில் தான் தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் இரட்டை குவளை முறை நிலவியது . கிராமங்கள் தோறும் சாதி தீண்டாமை கொடுமைகள் தலை விரித்து ஆடியது.
ஒரு படி நெல் உயர்வு கேட்டதற்காக குடிசைக்குள் வைத்து எரித்துக் கொல்லப்பட்ட 44 உயிர்களுக்கு அநீதி வழங்கியதும் அவர்கள் ஆட்சியில் தான் .தொழிலாளர் நலன் தொழிலாளர் நண்பன் என்று வசனம் எழுதிய கருணாநிதி ஆட்சி காலத்தில்தான் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்வுரிமைக்காகவும் ,மண்ணுரிமைக்காகவும் போராடிய போது 17 உயிர்களை தாமிரபரணி ஆற்றில் காவு வாங்கிய அரக்கர்கள் .
இந்த மண்ணின் பூர்வீக மக்களின் அடையாளங்களை மீட்டுருவாக்கம் செய்திடக் கூடாது என்று எண்ணி பள்ளன் என்று இழிவுபடுத்திய அந்த “ர் ” விகுதியைக் கூட நீக்குவதற்கு மனம் இல்லாத சமூக அநீதி ஆட்சி திமுக என்பதை உலகம் அறிய செய்தவர்.
அரசு வேலை வாய்ப்புகளிலும் காலி பணியிடங்களிலும் இரட்டடிப்பு செய்து மண்ணின் பூர்வகுடி மக்களுக்கு துரோகம் மட்டுமே தந்து எண்ணிலடங்காத துயரங்களையும், தமிழ்ச் சாதிகளுக்குள் பகைமையை மூட்டி சாதி சண்டையை வளர்த்து அதில் குளிர் காய்ந்தனர் திமுகவினர்.
மண்ணின் பூர்வீக குடிமக்கள் திராவிட ஆட்சி காலங்களில் பேரளவில் துன்பங்களை மட்டுமே பரிசாக பெற்றுக் கொண்டிருந்தனர் .முதன்முறையாக ஆட்சி அதிகாரத்தை நோக்கி பயணிப்பதற்கும், அவர்களுடைய அடையாளங்களை மீட்டுருவாக்கம் செய்வதற்கும், மண்ணின் பூர்வ குடி மக்கள் ஆன தேவேந்திர குல வேளாளர்களை தலைநிமிர்வோடு வாழ வைக்கவும் , சக தமிழ்ச் சாதிகளிடையே நட்புணர்வை விதைத்து, ஒற்றுமை உணர்வை வளர்த்து , சமநீதி ,சம பங்கு ,சம உரிமை சமத்துவம் இன்னும் உன்னதமான கொள்கைகளை வகுத்து மண்ணின் பூர்வகுடி மக்களால் தமிழகத்தை ஆள வைப்பதற்கு தோற்றுவிக்கப்பட்ட கட்சி தான் புதிய தமிழகம் கட்சி.
1992 ஆம் ஆண்டு தேவேந்திரகுல வேளாளர் சங்கம் 1994 ஆம் ஆண்டு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு . 1995 ஆம் ஆண்டு கொடியங்குளம் அநீதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம், , டெல்லியில் பேரணி, சென்னையில் பேரணி துப்பாக்கி சூடு என பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததின் வாயிலாக கொடியங்குளம் கொடுமைக்கு எதிராக நீதி வென்றெடுக்கப்பட்டது. உலக அரங்கில் மனித உரிமை மீறலுக்கு எதிரான ஒரு பேரியக்கம் தமிழகத்தில் கட்டமைக்கப்பட்டது.
1996 ஆம் ஆண்டு ஆட்சியதிகாரம் மறுக்கப்பட்ட ஓர் இனம்; காலங்காலமாக தனது உள்ள கிடங்கில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த அந்த அதிகார வேட்கை ஒட்டுமொத்தமாக பீறிட்டு எழுந்தது. டாக்டர் ஐயா அவர்கள் ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்டார்.தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். முதன்முறையாக அதே ஆண்டில் திருநெல்வேலியில் நாடாளுமன்ற பொது தொகுதில் டாக்டர் ஐயா அவர்கள் வேட்பாளராக போட்டியிட்டார். இன்று தனித்தொகுதியில் ஏன் போட்டியிடுகிறார் பொது தொகுதியில் போட்டியிட வேண்டும் என கர்சிக்கின்றவர்களுக்கு இந்த வரலாற்று பதிவை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தேர்தலில் தன்னந்தனியாக நின்று மண்ணின் பூர்வீககுடி மக்களின் பேராதரவோடு வெற்றி வாகை சூடியது . தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தினார். மேலும் டாக்டர் ஐயா அவர்களின் அரசியல் களமும், அரசியல் பயணமும், திருட்டு திராவிட கூட்டத்தை கதி கலங்க செய்தது.
1997 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி சமநீதி, சம பங்கு, சம உரிமை ,சமத்துவம் எனும் உயரிய கொள்கை கோட்பாட்டு லட்சியங்களால் தோற்றுவிக்கப்பட்டது புதிய தமிழகம் கட்சி. தங்களுக்கு எவ்வித அரசியல் அதிகாரமும் பங்கிடும் கொடுக்காத அரசியல் கொடிகள் இனி ஒருபோதும் தங்களது வீதிகளில் பறக்க கூடாது என்று எண்ணி முற்றாக அனைத்து அரசியல் கட்சி கொடி கம்பங்களையும் அகற்றிவிட்டு ஒரே கொடி! ஒரே தலைவர்! ஒரே கட்சி!என்று புதிய தமிழகம் கட்சி சிவப்பு பச்சை கொடி அனைத்து கிராமங்களிலும் பட்டொளி வீசி பறக்கத் தொடங்கியது. குறிப்பாக தென் தமிழகமெங்கும் பாதுகாப்பு கவசமாக சிவப்பு பச்சைக்கொடி மிளிரத் தொடங்கியது. அது வட தமிழகத்திலும் படர செய்தது.
மாவீரன் சுந்தரலிங்கம் பெயரில் போக்குவரத்து கழகம் ,தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவஞ்சலி பேரணி, நாட்டின் விடுதலைக்காகவும், மக்களின் ஒற்றுமைகளுக்காகவும் போராடிய தியாகச் சீலர்களின் தியாகத்தை உலக அறியச் செய்தது. அனைத்து சமுதாய மக்களுக்கான முன்னணி இயக்கமாக தமிழகத்தில் செயல்பட தொடங்கியது .
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகுத்து தந்த வாக்குரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை, சொத்துரிமை இன்ன பிற அடிப்படை உரிமைகளை டாக்டர் ஐயா அவர்கள் தான் ஏழை எளிய, விளிம்பு நிலை மக்களுக்கு உறுதி செய்தார்.
1998 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 15 தொகுதிகளில் தனித்து நின்று தமிழக அரசியல் வரலாற்றில் பல லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று தேர்தல் பாதையில் ஒரு மைல் கல்லை புதிய தமிழகம் கட்சி உருவாக்கியது.
1999 ஆம் ஆண்டு புதிய தமிழகம் கட்சியின் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் 10 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றது.
2001 ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலில் பத்து தொகுதிகளில் திமுக கூட்டணியோடு களம் கண்டு அவர்களின் நயவஞ்சகத்தால் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது .
2004 ஆம் ஆண்டு புதிய தமிழகம் கட்சி ஜனதா தளம் கூட்டணியோடு தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டது.
2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி உடன் கூட்டணி அமைத்து , 150-க்கும் மேற்பட்ட இடங்களில் அந்த கூட்டணி போட்டியிட்டது அதில் 80 தொகுதிகளில் புதிய தமிழகம் கட்சி போட்டியிட்டது என்பது வரலாறாகும்.
2009 ஆம் ஆண்டு புதிய தமிழகம் கட்சியுடன்,முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முதன்முறையாக மனிதநேய மக்கள் கட்சி என்ற கட்சியை தோற்றுவித்தப் பிறகு முதல் கூட்டணி அமைத்து ( இன்று டாக்டர் ஐயா அவர்களை ஆர்எஸ்எஸ் என்று விமர்சிக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும் ) தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் போட்டியிட்டார் .
2011ம் ஆண்டு அஇஅதிமுகவுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இரண்டு சட்ட மன்ற உறுப்பினர்களை வென்றெடுத்தது.
2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் திமுக துரோகத்தால் நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அஇஅதிமுகவுடன் கூட்டணி அமைத்து தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் டாக்டர் ஐயா அவர்கள் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை தங்களது வாக்குறுதியாக எந்தக் கட்சி அறிவிக்கிறதோ அந்த கட்சியுடன் கூட்டணி இல்லையென்றால் மக்களோடு கூட்டணி என்று தனித்து களம் கண்டு 60க்கும் மேற்பட்ட தொகுதியில் போட்டியிட்டோம்.
தமிழக சட்டமன்றத்திற்குள் 1996- 2001
இரட்டை குவளை முறை ஒழிப்பு, கண்டதேவி வழிபாட்டு உரிமை மீட்பு, மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் மண்ணுரிமை வென்றெடுத்தது, வெள்ளை அறிக்கை வாயிலாக அரசு உயர் பதவிகளிலும் அரசு பணியிடங்களிலும் பட்டியல் பிரிவினர்கள் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் என அனைவருக்கும் அரசு வேலை வாய்ப்பை நிலைநாட்டியது. இலங்கைத் தமிழர்களுக்காகவும்,கட்ச்ச தீவை மீட்பதற்காகவும், மீனவர் நலனுக்காகவும் குரல் எழுப்பினார்.
2011-2016 ஏழு தமிழர்களின் கழுத்தை நெரித்து சுவாசத்தை நிறுத்த முற்பட்ட அந்த தூக்குத் தண்டனையை ரத்து செய்து அவர்களை சுவாசிக்க வைத்தது. காவேரி மேலாண்மை வாரியம் அமைவதற்கு வழி வகுத்தது. என சட்டமன்றத்தில் எண்ணிலடங்காத பிரச்சனைகளை பேசி தீர்வு கண்டவர் . மேலும் அதிக நேரம் சட்டப்பேரவையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் என்கின்ற வரலாற்றுப் பதிவிற்கு சொந்தக்காரர் டாக்டர் ஐயா அவர்கள். சட்டப்பேரவையில் பத்தாண்டு காலம் குரல் அற்றவரின் குரலாக ஓங்கி ஒலித்தவர்.
கடந்த 25 ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் ,நாடாளுமன்றத் தேர்தல்களிலும் ,தனித்து நின்றும், கூட்டணியாக சேர்ந்து நின்றும் , அப்பழுக்கற்ற முறையில் புதிய தமிழகம் கட்சி ஜனநாயக கடமையைச் செவ்வனே செயலாற்றி வந்துள்ளது. இப்படிப்பட்ட ஒரு மகத்தான பேரியக்கத்தை கட்டியமைத்து கோடான கோடி தொண்டர்களை கட்டுக்கோப்பாக அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்களை ஒரு சங்கிலிப் பிணைப்பு போல நேர்மையாகவும், உண்மையாகவும், சம நீதி சம உரிமை, சமபங்கு, சமத்துவம் ,சகோதரத்துவம், எனும் உயரிய கொள்கை சித்தாந்தத்தால் வழிநடத்திக் கொண்டிருக்கின்ற மகத்தான தன்னகரில்லா தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் என்றால் அது மிகை ஆகாது.
இப்படிப்பட்ட நீண்ட நெடிய அரசியல் வரலாற்றுக்கு சொந்தமான புதிய தமிழகம் கட்சியின் வரலாற்றை இன்றைய இளைஞர்கள் நன்கு உணர்ந்து, இனிவரும் காலங்களில் வெற்றி வாகையை சூடுவதற்கு அனுதினமும் மாநில,மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை மற்றும் துணைநிலை அமைப்பினர்கள் கண் துஞ்சாவது கடமையாற்றுவதை உச்சி முகர்ந்து வரவேற்கின்றோம் .
நன்றி! வணக்கம்!
வாழையூர் குணா.






