வன்னியரசுவின் பேச்சைக் கண்டித்து செப். 30ல் ஆர்ப்பாட்டம்: புதிய தமிழகம் கட்சி தலைமை அறிவிப்பு!
2 Views

![]()
புதிய தமிழகம் கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூராட்சி, மாநகராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.!
வன்னியரசின் ’மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறி’ பேச்சைக் கண்டித்து, நாம் ஏற்கனவே அறிவித்தபடி, வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி காலை 11:30 மணி முதல் 12:30 மணி வரை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாகவும் புதிய தமிழகம் கட்சி மற்றும் இக்கருத்தில் உடன்பாடு கொண்ட தோழமை அமைப்புகள் சார்பாக ’கண்டன ஆர்ப்பாட்டம்’ நடைபெற உள்ளது.
தென்காசியில் மட்டும் மாலை 03.30 மணி முதல் 04:30 மணி வரை நடைபெறும்.
சென்னையில் வேறொரு தேதியில் பெரிய அளவில் நடைபெறும்.
அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் இது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி என்பதால், இப்போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட செயலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூராட்சி, மாநகராட்சி செயலாளர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் நமது கட்சியின் கொடிகளையும் பதாகைகளையும் தாங்கி வர வேண்டும்.
அந்தந்த மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்குவோர் மற்றும் முன்னிலை வகிப்போரின் பெயர் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
– தலைமை அலுவலகம்,
புதிய தமிழகம் கட்சி.
27.09.2026
- puthiya-tamilagam-announces-protest-locations-against-vanni-arasu









