அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நவநீதம் பிள்ளைக்கு டாக்டர் க.கிருஷ்ணசாமி வாழ்த்து!
4 Views

![]()
இந்திய – தமிழ் வம்சாவளி திருமிகு. நவநீதம் பிள்ளை!
இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கு மிகவும் தகுதி பெற்றவர்!
………………………………..
2026 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ள, இந்திய – தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த திருமிகு. நவி பிள்ளை என்ற நவநீதம் பிள்ளை அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரண்டு, மூன்று தலைமுறைகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்குக் குடிபெயர்ந்த தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த இவர், அங்கேயே பிறந்து வளர்ந்து சட்டக் கல்வி பயின்றார். தென்னாப்பிரிக்க உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய முதல் கறுப்பினப் பெண்மணி என்ற பெருமைக்குரியவர்.
வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் விளங்கிய இவர், தனக்காக மட்டுமன்றி அங்கு நிலவிய நிறவெறிக்கு எதிராகவும், உலக அளவில் மனித உரிமைப் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுத்துள்ளார்.
நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் (The Hague) நகரிலுள்ள பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியாகச் செயல்பட்டதுடன், பெண்களுக்கான உரிமைகளைப் பாதுகாப்பதிலும் முன்னின்று செயல்பட்டுள்ளார். அமைதிக்கான இவரது சிறந்த சேவையைப் பாராட்டி, இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
09.10.2026







