வன்னியரசுவின் பேச்சைக் கண்டித்து தமிழகம் தழுவிய போராட்டம் வெற்றி: டாக்டர் க.கிருஷ்ணசாமி நன்றி!

மாணவர்களுக்கு மாட்டுக்கறி வழங்குவது குறித்த வன்னியரசின் பேச்சைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சி மற்றும் தோழமை அமைப்புகள் சார்பில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பான கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றி பெற்றதாக டாக்டர் க.கிருஷ்ணசாமி அறிக்கை.

அறிக்கைகள்
s2 3 Views
830349625 1407749900796310 3256935281958144391 N
Published: 30 Sep 2026

Loading

மாணவர்களுக்கு மாட்டுக்கறி வழங்குவது குறித்து வன்னியரசின் சமூக விரோதப் பேச்சை வாபஸ் பெற வலியுறுத்தி—தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சி மற்றும் தோழமை அமைப்புகள் சார்பாக (சென்னை நீங்கலாக) அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாகவும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நாம் எதிர்பார்த்ததை விடவும் மிகச் சிறப்பாகவே நடைபெற்றிருக்கிறது.

அதன்படி,

• விருதுநகரில், புதிய தமிழகம் கட்சி மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில், வெ. திருப்பதி, V.G. குணம், S. சுப்பிரமணியன், M. ஈஸ்வரன், மா. கனி பாண்டியன், மா. பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

• தென்காசியில், மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில், கே. பால்ராஜ், ஆர்.கே. கிருஷ்ணபாண்டியன், இ. பிரபாகரன், ரா. கவிதா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

• கோயம்புத்தூரில், தமிழ்நாடு & பாண்டிச்சேரி விஸ்வகர்மா கூட்டமைப்பின் தலைவர் விஸ்வகர்மா ஜெகத்குரு சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள் தலைமையில், மொ. சங்கர் குரு, க. சுப்பிரமணியன், பிரேம் குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

• மதுரையில், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் கே.சி. திருமாறன் ஜி அவர்கள் தலைமையில், சோ. விஜயகுமார் முன்னிலையில் நடைபெற்றது.

• தூத்துக்குடியில், எஸ்.எம். செல்லத்துரை தலைமையில், வழக்கறிஞர் து. ரமேஷ், வழக்கறிஞர் ஜெ. ஜெகன், N. சுதன், கோவில்பட்டி அதிக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

• திருநெல்வேலியில், M. ராமர் அவர்கள் தலைமையில், க. செல்லப்பா, மு. சிவக்குமார், மா. கருப்பசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

• இராமநாதபுரத்தில், பழனி எஸ். விஜயகுமார் அவர்கள் தலைமையில், க. மகேஷ், ச. மலைச்செல்வம், ராமநாதன், சிவ. பாலுச்சாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

• சிவகங்கையில், செ. நியூட்டன் பாபு அவர்கள் தலைமையில், அ. இராஜமாணிக்கம் முன்னிலையில் நடைபெற்றது.
• புதுக்கோட்டையில், சிக்கிரி அ. செல்வராஜ் அவர்கள் தலைமையில், ஆசிரியர் அமலதாஸ், கே. தங்கவேலு, ஆ. வைரம் சுப்பையா, க. ரங்கன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

• திண்டுக்கல்லில், K. சிவநாதபாண்டியன் அவர்கள் தலைமையில், வழக்கறிஞர் பி. சங்கர், மா. பிரதீப் பாண்டியன், J. ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

• திருச்சியில், கோ. சண்முகம் அவர்கள் தலைமையில், மு. பாலு, அ. பிச்சை முத்து, மு. சின்னையன், செ. அருள்ஜோதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அதேபோல,
• தேனியில் ம. இளையராஜா அவர்கள் தலைமையிலும்,
• திருவாரூரில் மு. தியாகராஜன் அவர்கள் தலைமையிலும்,
• நாகப்பட்டினத்தில் கே. சுரேந்தர் அவர்கள் தலைமையிலும்,
• தஞ்சாவூரில் வே. விவேக் அவர்கள் தலைமையிலும்,
• சேலத்தில் எஸ். செல்வராஜ் அவர்கள் தலைமையிலும் ,
• பெரம்பலூரில் த. அருண்குமார் அவர்கள் தலைமையிலும்,
• நாமக்கல்லில் ஆர். செல்வக்குமார் அவர்கள் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றன என்ற செய்திகள் மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றன.

ஒட்டுமொத்தத்தில், தமிழ்நாட்டின் சாதி, மத, அரசியல் உள்நோக்கத்தோடு வன்னியரசால் தெரிவிக்கப்பட்ட சமூக விரோத கருத்தை இனிமேல் அவர்கள் மனதில்கூட எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு, இன்று அனைத்து அமைப்புகளோடு இணைந்து ஒரு மகத்தான போராட்டம் நடைபெற்றிருக்கிறது.

இப்போராட்டத்தில் கலந்துகொண்ட புதிய தமிழகம் கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், அதேபோல நம்முடைய கருத்துக்கு ஒத்த கருத்துடைய தோழமை அமைப்புகள் அனைவருக்கும்; அதேபோல செய்தி வெளியிட்ட ஊடக மற்றும் பத்திரிக்கை நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

– டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
30.09.2026