Virudunagar Meeting
Published: 16 Nov 2020

Loading

தலைவர் அவர்கள் டிசம்பர் – 15, மாலை 6 மணிக்கு காணொளி வாயிலாக சிறப்புரை ஆற்றுகிறார்!!
24
புதிய தமிழகம் தமிழகம் கட்சியின் 24-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நாளைய தினம் (15.12.2020) தேவேந்திரகுல வேளாளர்கள் வாழும் அனைத்துக் கிராமங்களிலும் புதிய தமிழகம் கட்சிக் கொடியேற்றி, பெயர்ப்பலகை திறந்து வைத்து, அனைத்து தரப்பு மக்களுக்கும் பொது விருந்து அளித்துக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை புதிய தமிழகம் கட்சியினர் சிறப்பாக செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்நிகழ்வுகளின் போது புதிய தமிழகம் கட்சியின் கொள்கைகளையும், சாதனைகளையும் பொது மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
24-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக, நாளை (15.12.2020) மாலை சரியாக 6 மணியளவில், *”புதிய தமிழகம் கட்சியின் புதுப்பிக்கப்பட்ட இணையதளம்”* மற்றும் *”2021-2016 ஆண்டுகளுக்கான புதிய தமிழகம் உறுப்பினர் – வாக்காளர் அட்டை”* தலைவர் *டாக்டர் அய்யா* அவர்களால் துவக்கி வைக்கப்பட இருக்கிறது.
அதைத் தொடர்ந்து, மாலை 6.15 மணிக்கு, புதிய தமிழகம் கட்சியின் கொள்கைகளையும் சாதனைகளையும் விளக்கி, *”தேவேந்திரகுல வேளாளர்களின் இலட்சியம் – பெயர் மாற்றம் மட்டுமா? பட்டியல் மாற்றத்துடனான பெயர் மாற்றமா?”* என்ற பொருளில் தலைவர் *டாக்டர் அய்யா அவர்கள்* சிறப்புரை ஆற்றுகிறார்.
தலைவர் அவர்களின் சிறப்புரையை தேவேந்திரகுல வேளாளர்கள் அனைவரும் கேட்கும் வகையில், 10,000 கிராமங்களில் உண்ணாவிரதம் இருந்ததைப் போல, அனைத்து கிராமங்களிலும் நாளை மாலை சரியாக 6 மணிக்கு தேவேந்திரகுல மக்களை ஓரிடத்திற்கு வரச்செய்து, *தலைவர் அவர்களின் அதிகாரப்பூர்வ Facebook, Twitter மற்றும் PT Media YouTube Channel* போன்ற சமூக ஊடகங்களின் வாயிலாக நேரலையில் டாக்டர் அய்யா அவர்கள் ஆற்றும் சிறப்புரையை LED SCREEN, LED TV, Laptop ஏற்பாடு செய்து ஒளிபரப்பு செய்யுமாறு அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளைச் செயலாளர்கள், தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர்கள், முன்னணி நிர்வாகிகள், சார்பு அணி பொறுப்பாளர்கள் அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிய தமிழகம் கட்சி
தலைமை அலுவலகம்.