உறுப்பினருக்கான விதிமுறைகளும்! நிபந்தனைகளும்!
Published: 10 Jan 2021

Loading

தலைமை அலுவலகம் அறிவிப்பு

புதிய தமிழகம் கட்சியின் 24-ஆம் ஆண்டு துவக்க விழாவின் போது கட்சியின் புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தையும், உறுப்பினர் சேர்க்கையையும் தலைவர் அவர்கள் துவங்கி வைத்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அதன்படி ஏற்கனவே கட்சியின் உறுப்பினராக இருக்கும் நிர்வாகிகள் அனைவரும் தங்கள் உறுப்பினர் பொறுப்பை புதுப்பித்துக் கொள்ளவும், இதுவரையிலும் உறுப்பினர் அடையாள அட்டை பெறாதவராக இருந்தால், தன்னை உறுப்பினராக பதிவு செய்து கொள்ளவும், அதேபோல ஒவ்வொரு பொறுப்பாளரும் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் உறுப்பினராக்கவும் வேண்டும். மேலும், நிர்வாகிகள் அவரவர் வாழும் கிராமங்களில் குறைந்தது 100 உறுப்பினர்களை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் முதற்கட்டமாக சேர்த்து அந்தத் தகவல்களை தலைமைக்கு அனுப்பி வைக்குமாறும், கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

தலைமை அலுவலகம்,
புதிய தமிழகம் கட்சி