Img 9100
Published: 23 Dec 2020

Loading

தலைமை அலுவலகம் அறிவிப்பு

புதிய தமிழகம் கட்சி அமைப்பு புனரமைப்புப் பணி கடந்த நவம்பர் மாதம் 18-ஆம் தேதி துவங்கப் பெற்று, டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் அனைத்து ஒன்றியங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 2021, ஜனவரி முதல் வாரத்தில் அனைத்து நிர்வாகிகளின் நியமன பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. புதிய தமிழகம் கட்சியின் 24-ஆம் ஆண்டு துவக்க விழாவின் போது கட்சியின் புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தையும், உறுப்பினர் சேர்க்கையையும் தலைவர் அவர்கள் துவங்கி வைத்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அதன்படி ஏற்கனவே கட்சியின் உறுப்பினராக இருக்கும் நிர்வாகிகள் அனைவரும் தங்கள் உறுப்பினர் பொறுப்பை புதுப்பித்துக் கொள்ளவும், இதுவரையிலும் உறுப்பினர் அடையாள அட்டை பெறாதவராக இருந்தால், தன்னை உறுப்பினராக பதிவு செய்து கொள்ளவும், அதேபோல ஒவ்வொரு பொறுப்பாளரும் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் உறுப்பினராக்கவும் வேண்டும். மேலும், நிர்வாகிகள் அவரவர் வாழும் கிராமங்களில் குறைந்தது 100 உறுப்பினர்களை டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் முதற்கட்டமாக சேர்த்து அந்தத் தகவல்களையும், நிர்வாகிகளுக்கான உறுதிமொழிப் பத்திரத்தையும் இணைத்து தலைமைக்கு அனுப்பி வைக்குமாறும், ஜனவரி-06 பேரணி ஏற்பாடுகளை துரிதப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

தலைமை அலுவலகம்,
புதிய தமிழகம் கட்சி