தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர் திரு. வெள்ளையன் அவர்கள் மறைவு – புதிய தமிழகம் கட்சி இரங்கல்.!
231 Views
![]()
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர் திரு. வெள்ளையன் அவர்கள் மறைவு – புதிய தமிழகம் கட்சி இரங்கல்.!
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர் திரு. வெள்ளையன் அவர்களுடைய மரணச் செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. கிராமம் மற்றும் பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என அனைத்து பகுதிகளிலும் தங்களுக்கு என்று ஒரு அமைப்பின்றி சிதறிக் கிடந்த பல்லாயிரக்கணக்கான வணிகப் பெருமக்களை ஓர் அமைப்பாகத் திரட்டி அவர்களுக்கான பாதுகாப்பையும், அவர்களின் குரல் பொதுவெளியிலே ஓங்கி ஒலிக்கவும் செய்தவர் வெள்ளையன் அவர்கள்.!
அதுமட்டுமின்றி, அவர் பல பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலைப் பகிரங்கமாக எதிர்த்தவர். நல்ல ஒரு நண்பர். அவருடைய மரணச் செய்தி லட்சோப லட்சம் வணிகப் பெருமக்களுக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் வணிகர் சங்க பேரமைப்பினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
10.09.2024






