மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைவு – புதிய தமிழகம் கட்சி இரங்கல்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைவு – புதிய தமிழகம் கட்சி இரங்கல்!
இடதுசாரி, பொதுவுடைமை சிந்தனை வாதி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான சீதாராம் யெச்சூரி அவர்களுடைய மரணச் செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
அவர் தனது மாணவப் பருவம் தொட்டு மார்க்சிய – லெனினிய சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு தன் ஒட்டுமொத்த வாழ்நாளையும் அதற்காக அர்ப்பணித்தவர். இந்திய அளவில் அரசியல் திறமற்ற நிலை நிலவிய 1996 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் அவரை டெல்லியிலே சந்தித்து உரையாடிய நினைவலைகள் இன்னும் நெஞ்சத்தை விட்டு நீங்கவில்லை.
அவரது எளிமை, இயல்பாகப் பழகும் தன்மை, இந்தியச் சமுதாயத்தைப் பற்றிய புரிதல்கள் மிகவும் ஆழமானவை; அவர் நுரையீரல் தொற்றால் இறந்துவிட்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. அவருடைய திடீர் மரணம் முற்போக்கு சிந்தனையாளர்களுக்கும் பொது உரிமை – பொது உடைமை நம்பிக்கையாளர்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும். புதிய தமிழகம் கட்சி அவருடைய மரணத்திற்குத் தனது வீர வணக்கத்தைச் செலுத்துகிறது. அவரது மறைவால் துயருறும் அனைத்து முற்போக்கு சிந்தனையாளர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய அனைத்து தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
12.09.2024