பேராயர் எஸ்ரா சற்குணம் மரணம் – புதிய தமிழகம் இரங்கல்.!
நினைவுகள்

Published:
24 Sep 2024
பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களது மரணத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பேராயர் அவர்கள் கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மை மக்களுக்கு மட்டுமின்றி, அனைத்து விளிம்பு நிலை மக்களின் சமூக பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுத்தவர். ஜாதி, மத, பேதமின்றி அனைத்து தரப்பு மக்களிடத்திலும் அன்பு காட்டியவர்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவர்களது திருச்சபையினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
24.09.2024