திரு. ட்ராபிக் ராமசாமி அவர்கள் பல முதலமைச்சர்களையும் எதிர்த்து தைரியமாக போராடியவர்!
289 Views
![]()
திரு.ட்ராபிக் ராமசாமி அவர்கள் தனது 87 வது வயதில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைகிறேன். தமிழகத்தில் ஆட்சி, அதிகாரங்களின் பின்புலத்தில் நடைபெற்ற பல்வேறு விதமான முறைகேடுகளை நீதிமன்றங்களில் பொதுநல வழக்கு மூலமாக அம்பலப்படுத்தி தட்டிக் கேட்டவர். “டிராபிக் ராமசாமி” என்ற அடைமொழிக்கு ஏற்ப சாலையோரங்களில் மற்றும் வாகன ஓட்டிகளின் கவனங்களை சிதறடித்த பெரிய பெரிய பதாகைகளை அகற்றுவதற்கு, பல முதலமைச்சர்களையும் எதிர்த்து தைரியமாக போராடியவர். அவருடைய தன்னலமற்ற சமூக சேவை மனிதர்களில் அரிதானது. அவருடைய மறைவு உண்மையிலேயே தமிழக மக்களுக்கு பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
04.05.2021







