முன்னாள் கல்வி அமைச்சர் செ. அரங்கநாயகம் அவர்கள் மறைவு! புதிய தமிழகம் கட்சி இரங்கல்

நினைவுகள்
s2 371 Views
  • முன்னாள் கல்வி அமைச்சர் செ. அரங்கநாயகம்

    முன்னாள் கல்வி அமைச்சர் செ. அரங்கநாயகம்

  • முன்னாள் கல்வி அமைச்சர் செ. அரங்கநாயகம்
Published: 30 Apr 2021

Loading

முன்னாள் கல்வி அமைச்சர் செ. அரங்கநாயகம் அவர்கள் மறைவு!
புதிய தமிழகம் கட்சி இரங்கல்

தமிழ்நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சர் செ. அரங்கநாயகம் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவருடன் எனக்கு மாணவப் பருவம் தொட்டு நெருங்கிய பழக்கம் உண்டு. என் மீது தனிப்பட்ட முறையில் அளவற்ற பாசமும், எனது அரசியல் வளர்ச்சியில் மிகுந்த அக்கறையும் கொண்டவர். மிகவும் நல்ல மனிதரும், நண்பரும் கூட. அவர் கல்வி அமைச்சராக இருந்தபோது பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
29.04.2021