திருமகன் ஈவேரா எம்.எல்.ஏ மரணம் – இரங்கல் செய்தி

நினைவுகள்
s2 634 Views
  • திருமகன் ஈவேரா எம்.எல்.ஏ

    திருமகன் ஈவேரா எம்.எல்.ஏ

  • திருமகன் ஈவேரா எம்.எல்.ஏ
Published: 06 Jan 2023

Loading

இரங்கல் செய்தி

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்பிற்கினிய நண்பர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் புதல்வர் திருமகன் ஈவேரா எம்.எல்.ஏ அவர்கள் தனது இளம் பிராயத்தில் மாரடைப்பால் மரணமெய்தி விட்டார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைகிறேன். இளம் வயதிலேயே சட்டமன்ற உறுப்பினராகி அனைத்து தரப்பினரது பாராட்டுகளையும் பெறக்கூடிய வகையில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த திருமகன் ஈவேரா அவர்களுடைய இழப்பு அவருடைய குடும்பத்தாருக்கும், பொது அரசியலுக்கும் பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது தந்தை ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் புதிய தமிழகம் கட்சியின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
05.01.2023.

Thirumagan Mla