எஸ் பி பாலசுப்ரமணியம் மறைவு – இரங்கல் செய்தி

நினைவுகள்
s2 307 Views
  • எஸ் பி பாலசுப்ரமணியம்

    எஸ் பி பாலசுப்ரமணியம்

  • எஸ் பி பாலசுப்ரமணியம்
Published: 13 Nov 2020

Loading

கரோனா தொற்றுக்கு ஆளாகி கடந்த ஒன்றரை மாதமாக சிகிச்சை பெற்று வந்த எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் பூர்ண நலம்பெற்று வீடு திரும்பிவிடுவார் என்றே நம்பிக்கொண்டு இருந்தோம். சற்றும் எதிர்பாராத வகையில் அவர் உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டு அவர் மரணம் எய்திவிட்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

தனது இசை வளத்தால் அரை நூற்றாண்டுக்கு மேலாக கோடான கோடி மக்களை வசீகரம் செய்திருந்த அவருடைய இழப்பு இந்திய தேசத்திற்கும் இசை உலகத்திற்கும் மிக பெரிய இழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், லட்சோபலட்ச ரசிகப் பெருமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்
புதிய தமிழகம் கட்சி
25-09-2020