இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தெற்குத் திட்டங்குளம் கருப்பசாமி அவர்களுக்கு புதிய தமிழகம் புகழஞ்சலி.!
299 Views
![]()
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தெற்குத் திட்டங்குளம் கருப்பசாமி அவர்களுக்கு புதிய தமிழகம் புகழஞ்சலி.!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள தெற்குத் திட்டங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி அவர்களுடைய புதல்வர் கருப்பசாமி (வயது 34). அவர் இந்திய இராணுவப் பணியில் சேர்ந்து எல்லைப்பகுதியான லடாக்கில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 19-ஆம் தேதி காலை இராணுவ முகாம் பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் அவர் உயிர் நீத்தார் என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், ஊர் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இராணுவ வீரர் கருப்பசாமிக்கு திருமணமாகி மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். மனைவி தமயந்தி B.Sc. (Fashion Technology), B.A. (History), B.Ed. படித்துள்ளார். எனவே அவருடைய கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசுவேலையும், ரூ.50 இலட்சம் நஷ்ட ஈடும் வழங்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறேன்.
டாக்டர்.க.கிருஷ்ணசாமி,
நிறுவனர் & தலைவர்
புதிய தமிழகம் கட்சி.
21/11/2020







