சேலம் எம்.எஸ்.கே. செல்லமுத்து அவர்கள் மரணம்! தலைவர் அவர்களின் இரங்கல் செய்தி
433 Views
![]()
சேலம் எம்.எஸ்.கே. செல்லமுத்து அவர்கள் மரணம்!
தலைவர் அவர்களின் இரங்கல் செய்தி
புதிய தமிழகம் கட்சியின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டச் செயலாளராகச் செயல்பட்டு வந்த எம்.எஸ்.கே. செல்லமுத்து அவர்களின் திடீர் மரணம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. புதிய தமிழகம் கட்சி துவங்கப்பட்ட நாள் முதல் ஒரு நல்ல தொண்டராக – அமைப்பாளராக – திறம்பட செயல்படக்கூடிய செயலாளராக கடந்த 25 ஆண்டு காலமாக தலைமைக்கும் கட்சிக்கும் விசுவாசத்துடன் பணியாற்றி கட்சியின் தொண்டர்கள் – நிர்வாகிகள் அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் அவர்.
அவருடைய திடீர் மரணம் புதிய தமிழகம் கட்சிக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினருக்கும், புதிய தமிழகம் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டாகடர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
27.06.2023






