இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் மரணம்! இந்திய தேசத்திற்குப் பேரிழப்பு!!

Lata Mangeshkar
Published On: 06 Feb 2022

தனது மெல்லியக் குரலால் திரையிசைப் பாடல்கள் மூலம் கோடானகோடி இந்தியர்களை கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்டிப் போட்டவர் லதா மங்கேஷ்கர் ஆவார். தனது 5 வயதில் பாடத் தொடங்கி தன்னுடைய அபாரத் திறமையால் 36 மொழிகளில் பாடல்களைப் பாடி வரலாறு படைத்தவர். அவர் தனது 93-வது வயதில் மரணமெய்தி இருக்கிறார் என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் உடலால் மறந்தாலும் இசையால் என்றென்றும் வாழ்வார். இந்த துயரமான நாளில் அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் – உறவினர்களுக்கும், கோடானகோடி ரசிகப் பெருமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
06.02.2022.