தினமலர் முன்னாள் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மறைவு! புதிய தமிழகம் இரங்கல் செய்தி!
நினைவுகள்
348 Views
Published:
05 Mar 2021
![]()
தினமலர் நாளிதழ் குழுமத்தின் முன்னாள் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மரணமெய்திய செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் பத்திரிக்கை ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் மட்டுமின்றி, மிகுந்த தமிழ் பற்றாளர்; தமிழ் – தமிழர் மற்றும் சங்ககால நாணயங்களின் தொன்மை குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அதன்மூலம் இந்திய சமுதாயத்திற்கு மிகப்பெரிய பணியாற்றியவர்.
அவருடைய மறைவு பத்திரிக்கை உலகிற்கும், தமிழக மக்களுக்கும் மிகப்பெரிய பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், பத்திரிக்கை உலகத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA,
நிறுவனர் & தலைவர்
புதிய தமிழகம் கட்சி.
05/03/2021







