புதிய தமிழகம் கட்சி மாநில கட்டமைப்புக் குழு நியமனம்
![]()
ஏழை. எளிய மக்களுக்கான நமது கட்சி 1997-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 1998, 2004, 2009-ஆம் ஆண்டுகளில் உறுப்பினர் சேர்க்கையும், அடையாள அட்டையும் வழங்கப்பட்டன. ஆனால் தொடர் போரட்டங்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் காரணமாக கட்சி கட்டமைப்பு பணிகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கைகள் கிராமப்புறம் வரை கொண்டு சேர்க்கப்பட இயலவில்லை.
எனவே, புதிய தமிழகம் கட்சியின் கட்டமைப்பை அடிமட்டம் வரையிலும் கொண்டு செல்லும் பணியை அடுத்த ஆறு மாதங்களுக்கு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர்களை சேர்க்கவும்; அடையாள அட்டைகளை இணையதளம் மூலமாக வழங்கும் பணியை மீண்டும் துவங்கவும்; இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக கிளை, ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, மாவட்ட, மாநில பொறுப்பாளர்களை ஜனநாயக ரீதியாக தேர்வு செய்ய உட்கட்சி தேர்தல் நடத்தவும் முடிவு செய்யப்படுள்ளது.
எனவே, அனைத்து கிராமங்களிலும் கொள்கை பிடிப்பானவர்களை கொண்டு கட்சி உறுப்பினர்களாக்கவும், கள அளவில் கட்டமைப்பை வலுப்படுத்தவும் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிராம அளவில் மாநில கட்சி கட்டமைப்புக் குழு உருவாக்கப்படவுள்ளது. அதன் துவக்கமாக மாநில கட்சி கட்டமைப்புக் குழு விபரம் அறிவிக்கப்படுகிறது.
இவர்கள் அனைவருக்கும் மாநில பொறுப்புகள் வழங்கப்படுவதால், மாவட்ட அளவிலான பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளுக்கு விரைவில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
இக்குழு கரோனா முழு முடக்கம் நீங்கியவுடன் மாவட்டம்தோறும் கிளை அமைக்கும் கட்டமைப்பு பணிகளை தொடங்குவார்கள். புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
டாக்டர் க.கிருஷ்ணசாமி,MD
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
03.06.2021







