புதிய துணைப் பொதுச் செயலாளர்கள் நியமனம்
![]()
புதிய தமிழகம் கட்சி பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டும், கட்சியை பரந்துபட்ட மக்களிடத்தில் எடுத்துச் செல்லும் வகையிலும் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கட்சியை மாவட்ட, ஒன்றிய, கிளை அளவில் அளவில் கட்டமைக்கும் பொருட்டு கீழ்கண்ட மாநிலக் குழு நியமிக்கப்படுகிறது.
மாநில பொதுச் செயலாளர்:
1. வே.க.அய்யர் – சென்னை
மாநில துணை பொதுச் செயலாளர்கள்:
1.ச.கதிரேசன் – இராமநாதபுரம்.
2.பழனி விஜயகுமார் – திண்டுக்கல்.
3.சங்கரன்கோவில் வீ. சுப்பிரமணியன் – தென்காசி.
4.கள்ளிமடை சுப்பிரமணியன் – கோவை.
இவர்கள் அனைவருக்கும் மாநில பொறுப்புகள் வழங்கப்படுவதால், மாவட்ட அளவிலான பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளுக்கு விரைவில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இக்குழு கரோனா முழு முடக்கம் நீங்கியவுடன் தமிழகமெங்கும் மாவட்ட, ஒன்றிய, கிராம அளவில் கட்சி கட்டமைப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்.
புதிய தமிழகம் கட்சி.
06.06.2021







