இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு நியமனம்.!
புதிய தமிழகம் கட்சி
இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு நியமனம்.!
சில முக்கிய நிர்வாகிகளின் மெத்தனப் போக்கின் காரணமாக கட்சியின் செயல்பாட்டில் பெரும் தொய்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் நீக்கப்பட்டு விட்டனர். அதைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளை நியமிக்க இன்று கோவை பொதிகை இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் அனைத்து ஒன்றிய, பேரூராட்சி, நகர, கிளை நிர்வாகிகள் ஒருங்கிணைந்து கட்சிப் பணிகளைத் துரிதப்படுத்தும் பொருட்டு ”புதிய தமிழகம் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு” நியமிக்கப்படுகிறது.
ஒருங்கிணைப்பு குழுவிற்கு புதிய தமிழகம் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
15.09.2024