புதிய தமிழகம் கட்சி மாநில கொள்கை பரப்பு குழு நியமனம்
![]()
புதிய தமிழகம் கட்சி பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டும், கட்சியின் கொள்கை-கோட்பாடுகளை பரந்துபட்ட மக்களிடத்தில் எடுத்துச் செல்லும் வகையிலும் மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் கொள்கைப் பரப்பு குழுக்கள் நியமிக்கப்படவுள்ளனர். அதன் துவக்கமாக மாநில கொள்கை பரப்பு குழு நியமிக்கப்படுகிறது. அதன்படி கீழ்கண்ட நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும் மாநில பொறுப்புகள் வழங்கப்படுவதால், மாவட்ட அளவிலான பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளுக்கு விரைவில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இக்குழு கரோனா முழு முடக்கம் நீங்கியவுடன் தமிழகமெங்கும் மாவட்ட, ஒன்றிய அளவில் பிரச்சாரத்தை மேற்கொள்வார்கள். புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
டாக்டர் க.கிருஷ்ணசாமி
புதிய தமிழகம் கட்சி
01.06.2021.







