டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமியை களமிறக்கியிருப்பதும் ஒரு வாரிசு அரசியல் தானே..?
பதிவுகள்
1536 Views
Published:
14 Dec 2020
![]()
நிருபர் கேள்வி:
உங்களை களமிறக்கியிருப்பதும் ஒரு வாரிசு அரசியல் தானே?..
டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி பதில்:
சிறுவயதிலிருந்தே என் தந்தையின் அடியொற்றி வளர்ந்தவன் நான். அவரின் அரசியல் பேச்சுகள், நடவடிக்கைகளை அருகிலிருந்து கவனித்து இருக்கிறேன்.
என்னை படிக்க வைத்து, அமெரிக்கா, லண்டன் என்று அனுப்பியிருந்தாலோ, அல்லது நான் சென்றிருந்தாலோ தான் அது தவறாகியிருக்கும். எந்த மக்களுக்காக என் தந்தை போராடினாரோ, அந்த போராட்டத்தை கொச்சைப் படுத்துவது போலாகியிருக்கும்.
எஸ்.சி. கோட்டாவில் நான் எம்.பி.பி.எஸ். படிக்கவில்லை. போராட்டம் எனது வாழ்வியல் முறை போல, மருத்துவம் எனது தொழில்.
திராவிட கட்சிகளின் வாரிசு அரசியலுக்கும், எங்களுக்கும் நிறைய வித்தியாசமிருக்கிறது.






