டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களை பொது வாழ்வுக்கு இழுத்த கிராமத்து சூழ்நிலை

பதிவுகள்
s2 450 Views
  • டாக்டர் கிருஷ்ணசாமி

    பெற்றோர் : கருப்புசாமி குடும்பர் – தாமரை அம்மாள்

  • டாக்டர் கிருஷ்ணசாமி

    பெற்றோர் : கருப்புசாமி குடும்பர் – தாமரை அம்மாள்

Published: 14 Dec 2020

Loading

கோவை மாவட்டம், உடுமலை அருகே மசக்கவுண்டன் புதூர் என்ற அந்த கிராமம். ஒரு சிற்றூராக இருந்தாலும் இந்தியாவின் அனைத்து விதமான சமூக சிக்கல்களையும் உள்ளடக்கிய ஒரு கிராமமாகவே இருந்தது. அந்த கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர்கள், கொங்கு வேளாளர்கள், நாயக்கர்கள், செட்டியார்கள், அருந்ததியர் என்று பல பிரிவினரும் வசித்து வந்தனர்.

1964-ல் அவர் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது கிராமத்தில் நிலச்சுவான்தார்கள் ஒரு புறமும், சிறு விவசாயிகள், நிலமற்ற விவசாயிகள் இன்னொரு பக்கமுமாக அணி திரளும் சூழ்நிலை , ஒரு பிரச்னையால் ஏற்பட்டது. அன்றைக்கு நிலச்சுவான்தார்களின் நிலங்களில் வேலை பார்த்த கூலி விவசாயிகள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் தான். அவர்களுக்கான ஊதியம் வெறும் தானியமாகவே வழங்கப்பட்டது. அப்போது விவசாயிகளுக்கான ஊதியத்தை தானியமாகத் தருவதற்குப் பதிலாகப் பணமாகவே வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு இயக்கம் உருவானது.

அந்த இயக்கத்தை அவரின் மூத்த சகோதரர் ராஜூ முன்னின்று நடத்தினார். சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்த நிலமற்ற விவசாயிகள் அந்த போராட்டத்தில் இணைந்தனர். இது இவரின் இளம் வயதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. 2,3 ஆண்டுகள் நீடித்த இப்போராட்டத்தின் முடிவில், கூலியைப் பணமாகத் தருவதற்கு நிலச்சுவான்தார்கள் முன்வந்தனர்.

இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தாலும், அப்பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமை பெருமளவுக்கு இருந்தது. அங்கிருந்த முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்த சிலர், தாழ்த்தப்பட்ட மக்களை தங்களுக்குச் சமமாக நடத்தும் மனப்பாங்கு அற்றவர்களாக இருந்தனர். இதை அவர் அனுபவரீதியாகவும், நேரடியாக 8-ஆம் வகுப்பு படிக்கும் போது கன்டார்.

எட்டாம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும் போது. ஒரு நாள் பள்ளி முடித்து வீடு திரும்பியதும், அவருடைய தாயார் தாமரை அம்மாள் அவர்களுக்கு உடல் நிலை சரியில்லாததால், ஊருக்கு ஒரு கிலோ மீட்டர் தள்ளியிருந்த பொதுக் கிணற்றில் இருந்து குடத்தில் தண்ணீர் கொண்டு வரும் படி அவரை அவர் தாயார் அனுப்பினார்.

அங்கு போகும் போது மற்ற சமூகப் பெண்கள், ஆண்கள் சிலர் தண்ணீர் எடுத்துக் கொண்டு போனார்கள். கிணற்றின் அருகில் தேவேந்திர குலப் பெண்கள் குடத்தோடு தண்ணீர் எடுக்காமல் நின்று கொண்டிருந்தார்கள் அவர்களிடம், அவர் ஏனக்கா தண்ணீர் எடுக்காமல் நீற்கிறீர்கள் என்று கேட்டபோது நாமாக எடுக்கக் கூடாது. வேறு சமூகத்தை சேர்ந்தவர்களை மொண்டு எடுத்துத் தரும்படி கேட்டு அதைப் பிடித்துக் கொண்டு போக வேண்டும். நாமாக எடுத்தால் பிரச்சனை ஆகும், என்று கூறினார்கள்.

அவர் உடனே நாம் எடுத்தால் என்ன தப்பா என்று கிணற்றுக்குள் சில படிகள் இறங்கி, குடத்தில் தண்ணீர் எடுத்து அவர்களுக்குப் பிடித்தக் கொடுத்தும் அவரும் எடுத்து வந்தார். இது ஊரில் பெரிய பிரச்னையாகி விட்டது. ஊரை விட்டு ஒதுக்க வேண்டும். என்கிற அளவுக்குச் சிலர் பிரச்சனை செய்தார்கள். ஆனால், கூலி விவசாயிகள் பலர் அவருடைய அண்ணன் ராஜூவுக்கு ஆதரவாக இருந்ததால் எதுவும் செய்ய முடியவில்லை.

இதே போல் 1971-ல் அவர் பத்தாம் வகுப்பு படித்தபோது, இரவில் கிராமத்தில் இருந்த தொடக்கப் பள்ளியில் மட்டும் தான் விளக்கு வசதி இருந்தது என்பதால், அங்கு சென்று மற்ற சமூகப் பிள்ளைகளுடன் சேர்ந்து படிப்பதற்குப் போவார். அதற்கும் அந்த கிராமத்தில் உள்ள பிற சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இப்படிப்பட்ட தீண்டாமை இருந்தது அவர் மனதில் அழமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவருடைய இளம் வயதில் வலுவாக ஏற்பட்டது.

இதனுடைய கோபமும், தாகமும் தான் இந்த மண்ணில் புதிய தமிழகம் இயக்கம் உருவானது.