வீரத்துறவி இராமகோபாலன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்!
நினைவுகள்
321 Views
Published:
13 Nov 2020
![]()
இந்து முன்னணியின் தளகர்த்தரான பெரியவர் இராமகோபாலன்ஜி அவர்களுடைய மரணச் செய்தி மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. அவர் தான் கொண்ட கொள்கையில் அணுவளவும் பிசகாமல் வாழ்ந்து காட்டியவர். தான் கொண்ட கருத்துக்கள் மீதும், தன் மீதும் தாக்குதல்கள் நடைபெற்ற போதும் இந்து பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் இந்து மதத்தின் விழுமிய அம்சங்களையும் மீட்டெடுப்பதற்காக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். தமிழக இந்து மக்களின் அடையாளமாகத் திகழ்ந்தவர் என்று சொன்னால் மிகையாகாது. அவருடைய மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
30.09.2020







