முன்னாள் ஜனாதிபதி மேதகு. பிரணாப் முகர்ஜி அவர்கள் மரணம்!

நினைவுகள்
s2 288 Views
  • மேதகு. பிரணாப் முகர்ஜி

    மேதகு. பிரணாப் முகர்ஜி

  • மேதகு. பிரணாப் முகர்ஜி
Published: 13 Nov 2020

Loading

முன்னாள் ஜனாதிபதி மேதகு. பிரணாப் முகர்ஜி அவர்கள் மரணம்!
புதிய தமிழகம் கட்சி இரங்கல்!!

இந்தியத் திருநாட்டின் முன்னாள் ஜனாதிபதி மேதகு. பிரணாப் முகர்ஜி அவர்களது மரணம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது மரணத்திற்கு புதிய தமிழகம் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
2012-ஆம் ஆண்டு அவர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அடுத்த நாள் டெல்லியிலுள்ள அவரது அலுவலகத்திலிருந்து நம்முடைய புதிய தமிழகம் கட்சி அலுவலகத்திற்கு அழைப்பு வந்திருக்கிறது என்பதை அலுவலக உதவியாளர் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. அடுத்த முனையில் அவருடைய இனிமையான குரலில் “How do you do Doctor” என்று அன்போடு அவர் அழைத்து புதிய தமிழகம் கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஆதரவைக் கேட்ட அந்த நிகழ்வு இன்னும் மனதில் நீங்காத நினைவுகளாக உள்ளது. அதேபோன்று அவர் வெற்றி பெற்ற பிறகு, அவரைச் சந்தித்து நாம் வாழ்த்துச் சொன்னபோது நம்மை அன்போடு ஆரத் தழுவிய நிகழ்வுகளெல்லாம் என்றும் மறக்க முடியாதது.

அவர் எல்லா திறமையும் கொண்ட ஓர் அற்புதமான மனிதர்; அப்பழுக்கற்ற தேசபக்தர். அவருடைய இழப்பு என்பது இந்திய தேசத்திற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய தேச மக்களுக்கும் புதிய தமிழகம் கட்சி மீண்டும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

டாக்டர்.க.கிருஷ்ணசாமி,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
31.08.2020