தேசிய கீதத்தை முதலில் பாடுவதில் திமுக அரசுக்கு தொடர்ந்து பிடிவாதம் ஏன்?

தேசிய கீதத்தை முதலில் பாடுவதில் திமுக அரசுக்கு தொடர்ந்து பிடிவாதம் ஏன்?
இந்திய அரசியல் சாசன விதிப்படியே மாநிலங்கள் உருவாக்கப்படுகின்றன. அதன்படி 1956-ம் உருவாக்கப்பட்டது தான் சென்னை மாகாணம்; பின்னர் அது ’தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றம் அமைக்கப்படுவதற்கும், அது எப்படி இயங்க வேண்டும் என்பதற்கும் வழி காட்டுவது ’இந்திய அரசியல் சாசனமே’. ஆளுநர் மாநில நிர்வாகத் தலைவராக உள்ளார்.
ஒவ்வொரு முறையும் சட்டமன்றம் துவங்கும் முன்னரும், நிறைவிலும் ’தேசிய கீதம்’ பாட வேண்டும் என்பது இந்தியாவெங்கும் உள்ள நடைமுறையாக உள்ள பொழுது தமிழ்நாட்டில் அவ்விதியை மீறுவது முறை அல்ல.
’அரசியல் சாசனம் வாழ்க’ என்று சொல்லிக் கொண்டே அரசியல் சாசனத்திற்கு எதிராக ஒரு மாநில சட்டமன்றம் இயங்க முடியாது. தேசிய கீதம் சட்டமன்றம் துவங்கும் முன் இசைக்கப்பட வேண்டும் எனும் விதி மீறப்படுவதை எந்த ஆளுநராலும் ஏற்றுக்கொள்ள இயலாது.
தமிழகத்தில் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் துவக்கத்தில் தேசிய கீதத்தை முதலில் பாட மறுத்த சட்டமன்ற கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டு ஆளுநர் அவர்கள் வெளியேறியது தவிர்க்க இயலாதது ஆகும்.
டாக்டர் கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
06.01.2025