தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு மத்திய சுகாதாரத் துறை மற்றும் ஆயுஷ் எழுப்பிய வினாக்கள் என்ன? ஜீன் 21, 27 ஆகிய தேதிகளிட்ட மத்திய அரசின் கேள்விகளுக்கு மாநில அரசு பதிலளித்து விட்டதா?

அறிக்கைகள்
s2 385 Views
  • தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு மத்திய சுகாதாரத் துறை மற்றும் ஆயுஷ் எழுப்பிய வினாக்கள் என்ன? ஜீன் 21, 27 ஆகிய தேதிகளிட்ட மத்திய அரசின் கேள்விகளுக்கு மாநில அரசு பதிலளித்து விட்டதா?

    தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா

  • தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு மத்திய சுகாதாரத் துறை மற்றும் ஆயுஷ் எழுப்பிய வினாக்கள் என்ன? ஜீன் 21, 27 ஆகிய தேதிகளிட்ட மத்திய அரசின் கேள்விகளுக்கு மாநில அரசு பதிலளித்து விட்டதா?
Published: 19 Jul 2022

Loading

தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு மத்திய சுகாதாரத் துறை மற்றும் ஆயுஷ் எழுப்பிய வினாக்கள் என்ன?

ஜீன் 21, 27 ஆகிய தேதிகளிட்ட மத்திய அரசின் கேள்விகளுக்கு மாநில அரசு பதிலளித்து விட்டதா?

அகில இந்திய அளவிலான முதுநிலை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கு ஏறக்குறைய 30 வருடங்களாகவும், இளங்கலை பட்டப் படிப்புகளுக்கு 2014 முதலிலிருந்து நாடு முழுவதும்நீட் தேர்வுஅமலிலுள்ளது. தமிழகத்தில் 2017 முதல் நீட் தேர்வின் மூலமாகவே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு தமிழகத்தில் அமலாக்கப்பட்டது முதல் திமுக, அதிமுக மற்றும் சில அரசியல் கட்சிகளும் நீட் தேர்விற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறார்கள். நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு அதிமுகவும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது; திமுகவும் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலும், அதன்பின் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக 08.02.2022 அன்று தீர்மானம் நிறைவேற்றியது. ஜனாதிபதி ஒப்புதலுக்காக அத்தீர்மானம் மத்திய அரசுக்கு ஆளுநரால் அனுப்பப்பட்டன.   

இந்நிலையில் இன்று தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்கள்நீட் விலக்குகுறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு உள்துறை அமைச்சரின் சார்பாக எழுத்துப்பூர்வமாக பதில் தரப்பட்டுள்ளது. அதில் தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா மீது மத்திய அரசின் சுகாதாரத் துறை மற்றும் ஆயுஷ் துறைகள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து அதுகுறித்து ஜூன் மாதம் 21, 27 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறைக்குக் கடிதங்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் கூறப்பட்டுள்ளது.

அப்படியெனில்,

1. கடந்த ஜீன் மாதம் 21, 27 ஆகிய தேதிகளில் மத்திய அரசின் சுகாதாரத் துறை மற்றும் ஆயுஷ் துறை தமிழக அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள் என்னென்ன?

2. அக்கேள்விகளுக்கு உடனடியாக மாநில அரசு பதில் கொடுத்து விட்டதா?

i. பதில் கொடுத்திருந்தால், அந்த பதில் என்ன?

ii. பதில் அனுப்பப்படவில்லை எனில், ஒரு மாத கால தாமதத்திற்கான காரணம் என்ன?

நீட் விலக்கு குறித்து மத்தியமாநில அரசுகளுக்கு இடையே நடைபெறும் கருத்து பரிமாற்றங்கள் குறித்து தமிழக மக்களுக்கு தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

 

டாக்டர் . கிருஷ்ணசாமி MD.Ex MLA,

நிறுவனர் & தலைவர்,

புதிய தமிழகம் கட்சி.

19.07.2022.