திரௌபதி முர்மு அவர்களின் வெற்றியை, மாநில எல்லைகளை தாண்டி அனைவரும் கொண்டாடுவோம்!
760 Views
![]()
திரௌபதி முர்மு அவர்களின் வெற்றியை,
மாநில எல்லைகளை தாண்டி அனைவரும் கொண்டாடுவோம்!
கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற இந்திய ஜனாதிபதிக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான மதிப்பிற்குரிய திரௌபதி முர்மு அவர்கள் வெற்றி பெறுவதற்கான 50 சதவீத வாக்குகளையும் தாண்டி மூன்றாவது சுற்றிலேயே 70 சதவிகிதம் வாக்குகளைப் பெற்று உள்ளார். அவருக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியினுடைய வாக்குகள் மட்டுமின்றி, எதிரணி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடைய வாக்குகளும் பெரிய அளவிற்கு கிடைத்துள்ளன. அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பைச் சூடக்கூடியவராக மாண்புமிகு முர்மு அவர்கள் உள்ளார். அவருக்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பாகவும், எனது தனிப்பட்ட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவருடைய வெற்றி இந்திய ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி. ஒரு தலைசிறந்த வேட்பாளர் என்ற அடிப்படையிலும் அவருக்கு ஒரு மகத்தான வெற்றி கிடைத்து இருக்கிறது. இவரது வெற்றி மூலம் இந்திய ஜனநாயகம் வலுப்பெறும்; குடியரசு நிலைபெறும். இந்தியாவின் புகழ் மட்டுமின்றி, இந்தியாவின் பண்பாடும், வலிமையும் சர்வதேச அளவில் நிலைநாட்டப்படும். அவர் இந்த மண்ணினுடைய பூர்வீக மக்களை அடையாளப்படுத்தக் கூடியவர். அவருடைய வெற்றி இந்திய தேசத்தில் சமூக நீதியையும் சம நீதியையும் நிலைநாட்டிட மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும். முர்மு அவர்களின் வெற்றியை மாநில, மத, சாதி, மொழி, இன, அரசியல் என அனைத்து எல்லைகளையும் தாண்டி அனைவரும் கொண்டாடுவோம்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
21.07.2022.






