திருநெல்வேலி, சுத்தமல்லி – முத்துகிருஷ்ணன் படுகொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது.! வழக்கை மத்திய புலனாய்வுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.!
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த அழகுமுத்து என்பவரின் மகன் முத்துகிருஷ்ணன் என்ற 20 வயது நிரம்பிய இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்து மிகுந்த வருத்தம் அடைகிறேன். இச்சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தொடர்ந்து தென்தமிழகத்தில் கடந்த மூன்று வருடங்களாக இதே போன்று தேவேந்திர குல வேளாளர் இளைஞர்கள் எவ்வித காரணமும் இன்றி படுகொலை செய்யப்படுவதை பலமுறை சுட்டிக்காட்டியுள்ளோம். அண்மையில் சென்னையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி பேரணியும் நடத்தினோம்.
இருந்தாலும் தமிழக காவல்துறை தொடர்ந்து தென் தமிழக படுகொலைகளை கட்டுப்படுத்த தவறி வருகிறது. எனவே, தேவேந்திர குல வேளாளர் இளைஞர் படுகொலை வழக்குகளை தமிழக அரசு விசாரித்தால் நிச்சயமாக நீதி கிடைக்காது.
எனவே, இந்த படுகொலை சம்பவங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளிக்கு வைக்க கூடிய வகையில் தேசிய புலனாய்வு துறையிடம் தேவேந்திரகுல வேளாளர் இளைஞர் படுகொலை வழக்குகள் அனைத்தையும் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
27.11.2024