மே 05 – மாவீரர்கள் துறையூர் பிலிப்ஸ், ஆலந்தா சண்முகம் வீரவணக்க நாள்!!
இன்றைய கால கட்டங்களைப் போல,
காகிதங்களுக்கு மண்டியிட்டு வாழ்ந்தவர்கள் அல்ல!
ஆயுத பாணிகளுக்கு எதிராக நிராயுதபாணிகளாகவும் சண்டையிட்டு வீழ்ந்த அல்ல – இன்றும் வாழ்ந்து வரக்கூடிய மாவீரர்களின் நினைவு நாள் இது!!
406 Views
![]()
மே 05,
இன்றைய கால கட்டங்களைப் போல,
காகிதங்களுக்கு மண்டியிட்டு வாழ்ந்தவர்கள் அல்ல!
ஆயுத பாணிகளுக்கு எதிராக நிராயுதபாணிகளாகவும் சண்டையிட்டு வீழ்ந்த அல்ல – இன்றும் வாழ்ந்து வரக்கூடிய மாவீரர்களின் நினைவு நாள் இது!!
1997 ஆம் ஆண்டு மே மாதம் 05 ஆம் தேதி சுந்தரலிங்க தேவேந்திரனார் பெயர் தாங்கிய போக்குவரத்துக்கழக போராட்டக் களத்தில் நான் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருநெல்வேலி – துறையூரில் நடைபெற்ற மிகப்பெரிய சாலை மறியலில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான மாவீரர்கள் துறையூர் பிலிப்ஸ் மற்றும் ஆலந்தா சண்முகம் ஆகியோரின் 24 ஆம் ஆண்டு நினைவு தினமாகும்.
ஆம், இன்றைய காலகட்டத்தைப் போல சில காகித நோட்டுகளுக்கு மண்டியிடக் கூடியவர்கள் வாழ்ந்த காலம் அல்ல, அது! இன மானத்தை காக்கவும்; சமூக அடையாளத்தை மீட்கவும் ஆயுதம் தாங்கிய காவலர்களுக்கு எதிராக நிராயுதபாணியாகவும் சண்டையிட்டு வீழ்ந்த இல்லை, இல்லை! இன்றும் நம்முடைய உள்ளங்களில் வாழ்ந்து வரும் மாவீரர்களான பிலிப்ஸ் மற்றும் சண்முகம் ஆகியோரின் தியாகத்தைப் போற்றுவோம்! மாவீர்கள் வாழ்க!! மாவீர்கள் புகழ் வாழ்க !!
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
05.05.2021






