புதிதாக பொறுப்பேற்கவுள்ள அரசின் செயல்பாடுகளுக்கு புதிய தமிழகம் கட்சி திறந்த மனப்பான்மையுடன் துணைநிற்கும்
290 Views
![]()
புதிதாக பொறுப்பேற்கவுள்ள அரசின்,
தமிழக மக்களின் வளர்ச்சிக்கான செயல்பாடுகளுக்கு
புதிய தமிழகம் கட்சி திறந்த மனப்பான்மையுடன் துணைநிற்கும்!
கடந்த ஏப்ரல் 06-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் குறித்து புதிய தமிழகம் கட்சிக்கு பல்வேறு விதமான மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. மே 02 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, திமுக அறுதிப்பெரும்பான்மை பெற்று முதல்வராக பொறுப்பேற்க உள்ள திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு புதிய தமிழகம் கட்சியின் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கரோனா பெருந்தொற்று சவாலாக உள்ள நேரத்தில் வரும் மே 07 ஆம் தேதி அவர் பதவியேற்க உள்ளார். திமுக பல்வேறு விதமான வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. பதவி ஏற்றவுடன் கரோனா பெருந்தொற்றிலிருந்து தமிழக மக்களை விடுவிக்கவும்; தமிழக மக்கள் மீதான பல்வேறு பொருளாதார, சமூக சுமைகளை குறைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். புதிதாக பொறுப்பேற்கவுள்ள அரசின், தமிழக மக்களின் வளர்ச்சிக்கான செயல்பாடுகளுக்கு புதிய தமிழகம் கட்சி திறந்த மனப்பான்மையுடன் துணைநிற்கும்!
இந்த தேர்தல் முடிவுகள் மற்றும் புதிய தமிழகம் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நாளை (05.05.2021) மாலை 02.30 மணி அளவில் கோவை பொதிகை இல்லத்தில் நடைபெற உள்ள புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்மட்டக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
04.05.2021






