ஆக்சிஜன் தட்டுப்பாடு வடமாநிலங்களின் நிலைமை தமிழ்நாட்டிற்கும் வந்துவிடக்கூடாது!
308 Views
![]()
வடமாநிலங்களில் நிலவிய ஆக்சிஜன் தட்டுப்பாடு தமிழ்நாட்டிலும் ஏற்பட்டு நேற்றையதினம் செங்கல்பட்டு மருத்துவமனையில் 11 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்ற செய்தி மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. தமிழ்நாட்டில் தேவைக்கு மேல் ஆக்சிஜன் உற்பத்தியாகிறது மற்றும் கையிருப்பு உள்ளது என்று ஒரு வாரத்திற்கு முன்புதான் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்திருந்தார். ஆனால், இப்பொழுது நிலைமை வேறாக இருப்பதாகத் தெரிகிறது. டிவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் வாயிலாக சென்னையின் பல பகுதிகளிலிருந்தும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், படுக்கை வசதிகள் கேட்டு நோயாளிகளின் உறவினர்கள் செய்திகளைப் பதிவிட்டு வருவது நிலைமை தமிழகத்திலும் மோசமாகி வருவதைக் காட்டுகிறது. எனவே, இன்னும் நிலைமை படுமோசமாகி விடாதவாறு தடுத்திட, அதிகாரிகள் கூடுதல் விழிப்புடன் செயல்பட்டு ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
05.05.2021






