டாஸ்மாக் கடைகளை நாள் முழுவதும் மூடினால் , குடி மூழ்கிப் போய் விடுமா?
அறிக்கைகள்
338 Views
Published:
05 May 2021
![]()
கரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் சூழலில் சாதாரணமாகப் பெட்டிக்கடைகளுக்கும் கட்டுப்பாடுகள் வந்துவிட்டன. ஆனால் பலரும் முட்டி மோதிக்கொள்ளக் கூடிய டாஸ்மாக் கடைகள் மட்டும் நீதிமன்றம் வரை சென்று திறந்து வைக்கப்பட்டன. இப்பொழுது பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வந்த உடன் காலை 8 மணி முதல் 12 மணி வரை மற்றும் செயல்படும் என்ற அறிவிப்பு வெளிவருகிறது. டாஸ்மாக் கடைகளே கரோனா பெருந்தொற்று பரவுவதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கின்ற பொழுது, அதை காலை 8 மணி முதல் 12 மணி வரை திறக்க வேண்டியதன் அவசியம் என்ன? நாள் முழுவதும் மூடினால் குடியா மூழ்கிப் போய்விடும்? எனவே, டாஸ்மாக் கடைகளை கரோனா தொற்றை அகற்றும் வரையிலும் நாள் முழுவதும் மூடி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
05.05.2021






