திசையன்விளை சுவாமிதாஸ் நகர் 19 வயது இளைஞர் முத்தையா – கௌரவக் கொலை?

அறிக்கைகள்
s2 365 Views
  • 1

    திசையன் விளை இளைஞர் முத்தையா - கௌரவக் கொலையா?

  • 1
Published: 25 Jul 2023

Loading

திசையன் விளை சுவாமிதாஸ் நகர் 19 வயது இளைஞர் முத்தையா – கௌரவக் கொலையா?

நெல்லை மாவட்டம் திசையன் விளை சுவாமிதாஸ் நகரைச் சார்ந்த கன்னியப்பன் என்பவரது புதல்வன் 19 வயது நிறைந்த முத்தையா என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டு, அவரது சடலம் ஜூலை 23ஆம் தேதி அன்று காட்டுப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. இவர் அருந்ததியர் சமுதாயத்தைச் சார்ந்தவர். இவர் வேறொரு சமுதாய பெண்ணுடன் விருப்பம் கொண்டதால் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல்கள் வெகுவாக பரவி வருகிறது. மது அருந்தும் போது நண்பர்களிடையே ஏற்பட்ட மோதலில் கொலை என்ற மாறுபட்ட தகவல்களும் சொல்லப்படுகின்றன. உண்மை எதுவாயினும், இந்த வழக்கில் நியாயமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

சாதி – மத வெறி எந்த அளவிற்கு மோசமோ; அதேபோல மது வெறியும் அந்த அளவிற்கு மோசமானது. அதனால் தான் ”மதுவை ஒழிக்க வேண்டும்” என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். எனவே, இந்த சம்பவத்தில் சாதி மட்டும் தானா? அல்லது மதுவா? அல்லது சாதியும் மதுவும் இணைந்து இந்த சம்பவங்கள் நடந்தேறி உள்ளதா? என்பதை மனசாட்சியுடன் காவல் துறை விசாரித்து உண்மை குற்றவாளிகளை மட்டுமே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
25.07.2023